சற்று முன்
Home / செய்திகள் / தமிழரசுக் கட்சியின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டுள்ள தமிழ் கட்சிகள்!

தமிழரசுக் கட்சியின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டுள்ள தமிழ் கட்சிகள்!

எழுபது வருட சுதந்திர சரித்திரத்தில் பல்வேறு தமிழ் கட்சிகள் வெவ்வேறு கொள்கைகளை முன்வைத்திருந்தாலும் கூட அனைத்து கட்சிகளும் இன்று இலங்கை தமிழரசுக் கட்சியின் யாப்பில் உள்ள கொள்கையே தமது கொள்ளையென்று ஏற்றுக்கொண்டுள்ளன என இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

சிறுப்பிட்டி தமிழறிஞர் இராவ்பகதூர் சி.வை.தாமோதரம்பிள்ளையின் 187 ஆவது ஜனனதின நினைவு பேருரரை ”இன்றைய சமஸ்டியின் விஸ்தீரணம்” என்னும் தலைப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

‘சமஷ்டி” என்று அழைக்கப்படுகின்ற அரசியலமைப்பு சட்டங்களை கொண்ட எல்லா நாடுகளிலேயேும் சில “ஒற்றையாட்சி” குணாதிசங்கள் காணப்படும் அந்த நாடு பிளவுபடாமல் ஒரே நாடாக இருப்பதற்கான ஏற்பாடுகள் தான் அந்த ஒற்றையாட்சி குணாதிசயங்கள். ஆனால் இவற்றை காரணமாக கொண்டு அது சமஷ்டி அல்லதென்று கூறிவிடமுடியாது.

இன்றைய சமஷ்டி என்பது வெறுமனே பெயரளவில் நின்றுவிடாமல் எல்லாவகையான அரசியலமைப்பு முறைமைகளுக்குள்ளும் விஸ்தீரணமடைந்துள்ளது.

ஆகையால் சமஷ்டியென்பது வெறுமனே பெயரவில் மட்டும் வர்ணிக்கப்படும் ஒரு ஆட்சிமுறையாக இருக்கமுடியாது. மாறாக ஒரு நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் உள்ளடக்கத்தை ஆராய்கின்ற போது சமஷ்டியின் அடிப்படை குணாதிசயங்கள் காணப்படுமாக இருந்தால் அதற்கு என்ன பெயர் கொடுத்தாலும் பெயரே கொடுக்காவிட்டாலும் அது சமஷ்டி ஆட்சிமுறையாகவே இருக்கும்.

About Sujitha Thurairajan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com