சற்று முன்
Home / செய்திகள் / தமிழரசுக் கட்சிக்கு விளக்கம் கொடுக்கவேண்டிய அவசியமில்லை – சித்தாத்தன் எம்.பி

தமிழரசுக் கட்சிக்கு விளக்கம் கொடுக்கவேண்டிய அவசியமில்லை – சித்தாத்தன் எம்.பி

தமிழ் மக்கள் பேரவையில் கலந்து கொண்டமை தொடர்பில் தமிழரசுக் கட்சிக்கு விளக்கம் கொடுக்கவேண்டிய அவசியமில்லை. தமிழரசுக்கட்சி விளக்கம் கேட்கவும் முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும்,  புளெட் அமைப்பின் தலைவருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையயின் கூட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் விளக்கம் கோரப்படும் என  பாராளுமன்ற உறுப்பினரரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா தெரிவித்திருந்தார்.
அது தொடர்பில் சித்தார்த்தனிடம் கேட்டபோதே அவ்வாறு பதிலளித்தார். 
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 
 தமிழ் மக்கள் பேரவையில் நான் கலந்து கொண்டமை தொடர்பில் என்னிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பே விளக்கம் கேட்க முடியும் அவ்வாறு அவர்களும் விளக்கம் கேட்பதாயின் அதுவும் கூட்டமைப்பின் பொதுக் கூட்டத்திலேயே கேட்க முடியும். அவ்வாறு கூட்டமைப்பு கேட்டால் அதற்கான பதிலை நாங்கள் வழங்கத் தயாராகவே இருக்கின்றோம் தமிழரசுக் கட்சி எனக்கு நடவடிக்கை எடுக்க முடியாது. அவ்வாறு அவர்கள் என்னிடம் விளக்கமும் கேட்க முடியாது.  என்றார். 

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com