சற்று முன்
Home / செய்திகள் / தமிழரசுக்கட்சியின் சதிவலை – ஐங்கரநேசன் வெளியே – குருகுலராசா உள்ளே !!

தமிழரசுக்கட்சியின் சதிவலை – ஐங்கரநேசன் வெளியே – குருகுலராசா உள்ளே !!

வடமாகாண அமைச்சர்கள் விடயத்தில் விவசாய அமைச்சர் ஐங்கரநேசனை பதவியிலிருந்து அகற்றிவிட்டு கல்வி அமைச்சர் குருகுலராஜாவை காப்பாற்றும் நோக்கினில் தமிழரசு கட்சி மும்முரமாக செயற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மும்முரமான வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுவருவதாக அறியமுடிகின்றது. கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குருகுலராஜாவைக் காப்பாற்றும் கைங்கரியங்களில் கடுமையாக ஈடுபட்டுவகின்றார். கல்வி அமைச்சரிற்கு எதிரான நடவடிக்கைகளினால் சீற்றமடைந்துள்ள அவர் இது தொடர்பில் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவையிடம் காட்டமான கருத்துக்கள் சிலவற்றினை முன்வைத்துள்ளதாக சொல்லப்படுகின்றது.

அதே நேரம் பிரபல வர்த்தகரான யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஐங்கரநேசனை பதவிநீக்கம் செய்யும் முனைப்பில் காய்களை நகர்த்திவருவதாக தெரியவருகின்றது. அதற்காக அவர் தனது கட்சி ஊடகத்தை கடுமையாகப் பயன்படுத்தி ஐங்கரநேசனை இலக்குவைத்து தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றமையும் தெரிந்ததே. இவருக்குப் பக்கபலமாக சுமந்திரன் ஆதரவு அணியினரும் ஐங்கரசேனை இலக்குவைத்து அவரை வெளியகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கு மாகாணசபையைப் பெறுத்தவரை நான்கு அமைச்சர்களும் மோசடிகளில் ஈடுபட்டதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல எனக் கூறப்படுகின்றபோதும் ஐங்கரநேசன் முதலமைச்சருக்கு நெருக்கமாகச் செயற்பட்டமையே அவரை பழிவாங்குவதனூடாக முதலமைச்சரை ஓரங்கட்டும் வேலைத்திட்டமே அமைச்சர்களிற்கு எதிராக குற்றச்சாட்டுக்களும் தற்போதுவரையான நடவடிக்கைகளும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

சகல அமைச்சுக்களின் மீதும் முறைப்படியான நீதியான விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட்டால் நான்கு அமைச்சர்களும் பதவி இழக்கவேண்டும் எனக் கூறப்படுகின்றது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை !

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க அனுமதிக்க முடியாது ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com