சற்று முன்
Home / செய்திகள் / தமிழக மீனவரின் உடல் சொந்த ஊரில் உறவினர்கள் கண்ணீருடன் தகனம்

தமிழக மீனவரின் உடல் சொந்த ஊரில் உறவினர்கள் கண்ணீருடன் தகனம்

இலங்கை கடற்படையின் தாக்குதலில் பலியான தமிழக மீனவர் முனுசாமியின் இறுதிக் கிரியைகள் நேற்று அவரது சொந்த ஊரான எலந்தைகூட்டம் கிராமத்தில் நடைபெற்றது.

உறவினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு கண்ணீர் மல்க இறுதிக் கிரியைகளில் பங்கேற்ற நிலையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

குறித்த மீனவர் முது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டதாகவும் அவரது படகின்மேல் தமது படகினால் மோதி மீனவரை நீரில் மூழ்கடித்து கொன்றதாகவும் சக மீனவர்களால் கூறப்பட்டுவந்த நிலையில் இலங்கை கடற்படை அதனை மறுத்துள்ளது.

குறித்த இந்திய மீனவர் தானாகவே கடலில் குதித்ததாகவும் தாம் தாக்குதல் நடத்தவில்லை என்றும் கூறிவருகிறது.

இந்நிலையில் இறந்த மீனவருடன் மீன்பிடிக்க சென்று இலங்கை சிறையில் உள்ள மூன்று மீனவர்களிடம் விசாரணை செய்து இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதி மீனவர் உயிர்யிழந்தார் என உறுதி செய்யும் பட்சத்தில் இலங்கை கடற்படை மீது வழங்கு பதிவு செய்து கடற்படை அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதேவேளை

இறந்த மீனவரின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் உதவி தொகையாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இறந்த மீனவரின் உடலம் இலங்கை கடற்படையால் பொலிஸ் ஊடாக யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு பின்னர் இந்தியத் துணைத் தூதரக ஏற்பாட்டில் தமிழகத்திலுள்ள மீனவரின் சொந்த கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com