சற்று முன்
Home / செய்திகள் / டெங்கு நுளம்பு வளர்த்த யாழ் மாநகரசபை உறுப்பினர் – அதிகாரிகளிடம் தர்க்கம்

டெங்கு நுளம்பு வளர்த்த யாழ் மாநகரசபை உறுப்பினர் – அதிகாரிகளிடம் தர்க்கம்

டெங்கு நோய் பரவும் வகையில் சுற்றுசூழலை வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் யாழ் மாநகர சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது.

கடந்த வியாழக்கிழமை (20) சுகாதார துறையினர் பொலிஸ் உத்தியோகத்தர் சகிதம் யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது கலிமா வீதியில் தற்காலிகமாக வசித்து வந்த குறித்த மாநகர சபை உறுப்பினரான எம்.எம்.எம் நிபாஹிரின் வீட்டிற்கு அவ் அதிகாரிகள் சென்றிருந்த நிலையில் டெங்கு பரவும் வகையில் சூழலை வைத்திருந்ததை கண்டித்திருந்தனர்.

ஆனால் குறித்த அதிகாரிகளை மாநகர சபை உறுப்பினர் கடமையை செய்யவிடாது அடித்து துரத்த முயன்றுள்ளார்.
இந்நிலையில் அதிகாரிகளுடன் வந்த பொலிஸ் உத்தியொகத்தர்கள் உடனடியாக தலையிட்டு மாநகர சபை உறுப்பினரை எச்சரித்ததுடன் வழக்கு தாக்கல் செய்ய அதிகாரிகளை பணித்துள்ளனர்.

இதே வேளை குறித்த மாநகர சபை உறுப்பினர் கடந்த யாழ்ப்பாண மாநகர சபை தேர்தலில் 10 ஆம் வட்டார வேட்பாளராக போட்டியிடும் போது புத்தளத்தில் நிரந்திர வதிவிடத்தை கொண்டிருந்தார் என்கின்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டள்ளது.

மேலும் வடக்குமாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் முன்னாள தீவிர விசுவாசியாக இருந்த இவர் தேர்தலின் பின்னர் ஏற்பட்ட முரண்பாட்டினால் இவ்விருவரும் அரசியல் எதிரிகளாக மாறி உள்ளனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com