சற்று முன்
Home / செய்திகள் / ஜனாதிபதித் தேர்தல் டிசம்பர் 07 இலாம்

ஜனாதிபதித் தேர்தல் டிசம்பர் 07 இலாம்

ஜனாதிபதித் தேர்தல் வரும் டிசெம்பர் 07ஆம் நாள் அல்லது அதற்கு முந்திய ஒரு சனிக்கிழமையில் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளதாக, தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலுக்கான அழைப்பை விடுக்காமல், தமது முழுப் பதவிக்காலமும் பதவியில் இருக்க முடிவு செய்தால், ஜனாதிபதித் தேர்தல் வரும் நவம்பர் 09ஆம் திகதிக்கும் டிசெம்பர் 09ஆம் திகதிக்கும் இடையில் நடத்தப்பட வேண்டும்.

2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலை ஒக்ரோபர் 22 ஆம் நாள் இறுதி செய்வதற்கு தேர்தல் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது,

அன்றைய நாளில் தேர்தலுக்காக அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டால், குறைந்தபட்சம் அடுத்த நான்கு வாரங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

எனவே, டிசெம்பர் 07ஆம் திகதி சனிக்கிழமை அல்லது அதற்கு முந்திய ஒரு சனிக்கிழமையில் தேர்தல் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளது என்றும், தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com