சற்று முன்
Home / செய்திகள் / ஜனநாயகப் போராளி சம்பந்தன் ஏன் மாகாணசபைத் தேர்தலை நடத்த கோரவில்லை ? மகிந்த கேள்வி

ஜனநாயகப் போராளி சம்பந்தன் ஏன் மாகாணசபைத் தேர்தலை நடத்த கோரவில்லை ? மகிந்த கேள்வி

ஜன­நா­ய­கத்­தைப் பாதுகாக்­கப் போரா­டும் கூட்­ட­மைப்­பின் தலை ­வர் சம்­பந்­தன், மாகா­ண­ச­பை­க­ளுக்­கான தேர்­தல் இன்­ன­மும் நடத்­தப்­ப­டாமை தொடர்­பில் ஏன் கேள்வி எழுப்­ப­வில்லை.

இவ்­வாறு முன்­னாள் ஜனாதிபதியும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­துள்­ளார்.

கேகா­லை­யில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற நிகழ்­வில் பங்­கேற்று கருத்­துத் தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

இந்த அரசு தற்­போது ஜனாதிபதித் தேர்­தல் நடத்­தப்­ப­ட­வேண்­டும் என்று வலி­யு­றுத்­து­கின்­றது. நாங்­கள் பொதுத் தேர்­தல் நடத்­தப்­பட வேண்­டும் என்று கேட்­கின்­றோம். இப்­போது மாகா­ண­ச­பைத் தேர்­தல் நடத்­தப்­பட வேண்­டும். ஆறு மாகா­ண­ச­பை­க­ளின் ஆயுள்­கா­லம் முடி­வ­டைந்து அவை ஆளு­ந­ரின் கட்­டுப்­பாட்­டில் இயங்­கு­கின்­றன. உட­ன­டி­யாக மாகா­ண­ச­பைத் தேர்­தலே நடத்­தப்­ப­ட­வேண்­டும்.

தங்­களை ஜன­நா­ய­கத்­துக்­கா­கப் போரா­டு­ப­வர்­க­ளா­கக் காட்­டிக் கொள்­ளும் சம்­பந்­தன், மாகா­ண­ச­பைத் தேர்­தலை நடத்­து­மாறு ஏன் போரா­ட­வில்லை. நான் ஆட்­சி­யில் இருந்­த­போது, வடக்கு மாகா­ண­ச­பைத் தேர்­த­லில் எங்­கள் கட்சி வெல்­லாது என்று தெரிந்­தும் தேர்­தலை நடத்­தி­னேன். ஜன­நா­ய­கத்­தைப் பாது­காக்க நான் அத­னைச் செய்­தேன்.

இந்த அரசு முன்­வைக்­க­வுள்ள வரவு – செல­வுத் திட்­டத்­தில் அரச பணி­யா­ளர்­க­ளுக்கு சம்­பள உயர்வு, மக்­க­ளுக்கு சலு­கை­க­கள் வழங்­கப்­ப­ட­வேண்­டும் – என்­றார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com