சற்று முன்
Home / செய்திகள் / செய்தியாளர்களிற்கு ஆபத்தான நாடு – இலங்கையைப் பின்னுக்குத் தள்ளியது இந்தியா

செய்தியாளர்களிற்கு ஆபத்தான நாடு – இலங்கையைப் பின்னுக்குத் தள்ளியது இந்தியா

செய்தியாளர்களுக்கு ஆபத்தான நாடு என்ற பட்டியலில் இலங்கையைப் பின்னுக்குத் தள்ளிய இந்தியா ஆசிய நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு உலகம் முழுக்க கொல்லப்பட்ட 110 செய்தியாளர்களில் 9 பேர் இந்தியர்கள்.
‘ரிபோர்ட்டர்ஸ் விதவுட் பார்டர்ஸ்’ என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. 
சர்வதேச நாடுகளை பொறுத்த வரை  உலகளவில் சிரியாதான் செய்தியாளர்களுக்கு அச்சுறுத்தல் தரும் நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தை பிரான்ஸ் பிடிக்க பிரேசிலுக்கு 3வது இடம். 
இந்தியாவை பொறுத்தவரை,  கிரைம் செய்தியாளர்களும், அரசியல்வாதிகளை பற்றிய புலனாய்வு செய்திகள் தரும் செய்தியாளர்களும் கனிம வளக் கொள்ளை பற்றிய செய்தி வெளியிட்ட செய்தியாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதில்  செய்தி சேகரிக்கும் இடத்திலேயே 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மற்ற  4 பேர் விபத்து ஏற்படுத்தப்பட்டு, கொல்லப்பட்டுள்ளார்கள். 

இந்த வருட ஆய்வின்படி ஆசியாவில் அதிக செய்தியாளர்கள் கொல்லப்பட்டது இந்தியாவில்தான். எனவே ஆசியாவில் இந்தியா முதலிடம் பிடிக்கிறது. அடுத்த இடத்தை பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் பிடிக்கின்றன. இலங்கையைப் பெறுத்தவரை கடந்த ஜனவரி உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசின் தோற்றத்தின் பின் செய்தியாளர்கள் கொலைகள் மற்றும் காணாமல்போதல்கள் இல்லாதிருந்தபோதும் அச்சுறுத்தல்கள் தொடரத்தான் செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச நாடுகளை பொறுத்தவரை,  67 செய்தியாளர்கள் செய்தி சேகரிக்கும் இடத்திலேயே பலியாகியுள்ளனர். இன்னும் 43 பேர் எப்படி இறந்து போனார்கள் என்றே தெரிய வரவில்லை. 

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com