சற்று முன்
Home / செய்திகள் / சென்னைக்கு உதவி செய்ய தயார்! அமெரிக்கா தகவல்

சென்னைக்கு உதவி செய்ய தயார்! அமெரிக்கா தகவல்

வரலாறு காணாத மழையால் சிக்கித் தவித்து வரும் சென்னை-க்கு உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தி தொடர்பாளர் மார்க் டோனர் கூறியதாவது:
தமிழ்நாடும், இந்திய அரசும் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வெள்ள சேதத்தை எதிர்கொண்டு உள்ளது. இந்த கடினமான நேரத்தில் சென்னைக்கு உதவி அளிப்பது குறித்து இந்தியாவுடன் ஆலோசித்து வருகிறோம்.
உதவி கேட்டு இந்தியாவிடம் இதுவரை எந்த கோரிக்கையும் வரவில்லை. சென்னை மக்களுக்கு துணையாக உதவி செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது. சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் அனைத்து சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. சென்னையில் உள்ள அமெரிக்க குடிமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுகொண்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com