சற்று முன்
Home / செய்திகள் / சுமந்திரன் பகிரங்க பொது மன்னிப்பு கோர வேண்டும்!

சுமந்திரன் பகிரங்க பொது மன்னிப்பு கோர வேண்டும்!

“இந்த மண்ணிற்காய் ஆயுதமேந்தி மரணித்த வீரர்களை பெற்றெடுத்தவர்களிடமும், போராளிகளிடமும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பகிரங்க பொது மன்னிப்பினை கோர வேண்டும்” என  ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி  வெளியிட்டுள்ள  ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இடர்பாடுகள் நிறைந்த இன்றைய தாயக அரசியல் களத்தில் நாவடக்கம் பிரதானமானது. தமிழர்கள் ஆயுதமேந்தியது இன்னுமோர் இனத்தின்மீது மேலாதிக்கத்தை செலுத்துவதற்காக அல்ல எங்களது தமிழினம் கொல்லப்படுவதில் இருந்து எம்மை பாதுகாத்துக்கொள்வதற்காகவே  ஆயுதமேந்தினோம்.

அந்தவகையில் உயிரையும், உதிரத்தையும் கொடுத்து தமிழ்த்தேசியத்தை உருவாக்கி அதன் காவலர்களாக, கவசங்களாக காத்து நின்றவர்கள் போராளிகள்தான்.

நாம்  உருவாக்கிய தேசியத்தில் பதவிகள் தருகின்ற இதமானசூடுகளை அனுபவித்து ஆள்கின்றவர்கள் விடுதலைக் கனவுடன் ஆயுதமேந்தியோரை மலினப்படுத்தும் விதமாக ஆயுததாரிகள் என விளித்து நிற்பது அறத்திற்கு அப்பால்பட்டது.

ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் நீங்கள் அடிக்கின்ற அரசியல் அலப்பறைகள் எமக்கும், எமது மக்களுக்கும் புதியவையல்ல அவற்றினை நாம் கசப்புணர்வோடே அவதானிக்கின்றோம் . விரைந்து மாறுகின்ற அரசியல்களம் நிலைத்து நீட்சிபெறுவதற்கு இதுபோன்ற சொல்லாடல்கள் என்றுமே பலம்  சேர்க்கபோவதில்லை. யாராகினும் நா காக்க வேண்டுகிறோம்.

இவ்வாறான சொல்லாடல்களை பயன்படுத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரன்  இந்த மண்ணிற்காய் ஆயுதமேந்தி  மரணித்த வீரர்களை பெற்றெடுத்தவர்களிடமும், போராளிகளிடமும் பகிரங்க பொது மன்னிப்பினை கோர வேண்டுமென்பதே எமது நிலைப்பாடாகும்.” என ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‌

About Sujitha Thurairajan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com