சற்று முன்
Home / செய்திகள் / சுமந்திரனின் கொடும்பாவி – சகபாடிகளே சூத்திரதாரிகள் ??

சுமந்திரனின் கொடும்பாவி – சகபாடிகளே சூத்திரதாரிகள் ??

ஆயுதப் போராட்டம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ள
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் கொடும்பாவி நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு தூபிக்கு அண்மையில் வைக்கப்பட்ட விவகாரத்தில் கூட்டமைப்பின் சக நாடாளுமன்ற உறுப்பினரது ஆதரவாளர்களே இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த கொடும்பாவியினை யாழ்ப்பாணம் காவல்துறையினர் சற்றுமுன்னர் வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து அகற்றியுள்ளனர்.
சுமந்திரனின் உருவப் பொம்மைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு “தமிழினத்தின் துரோகி” என்ற பதாகையை குறித்த உருவ பொம்மையில் தொங்க விடப்பட்டிருந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்துக்களைத் தெரிவித்திருந்த கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் ஆயுதப் போராட்டம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து இருந்தார்.

இதற்கு அவரது கட்சிக்குள்ளும், கட்சிக்கு வெளியிலும் பல எதிர்ப்புக்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் உருவப்படம் காட்சிப்படுத்தப்பட்டு, செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ள பரபரப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று இரவின் பின்னர் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட பின்னர், யாரோ மர்ம நபர்கள் சுமந்திரனின் உருவப்படத்தை நாட்டி, செருப்பு மாலை அணிவித்துள்ளனர்.

குறித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரது அருகாகவுள்ள வதிவிடத்திலிருந்து எடுத்து வரப்பட்ட கொடும்பாவி அங்கு கட்டி வைக்கப்பட்ட பின்னர் காலையே பொதுமக்கள் கண்களில் அகப்பட்டிருந்தது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com