சற்று முன்
Home / செய்திகள் / சிறு கைத்தொழில் செய்யும் பெண் தலமைத்துவக் குடும்பங்களிடம் வரி அறவிடும் துயரம்

சிறு கைத்தொழில் செய்யும் பெண் தலமைத்துவக் குடும்பங்களிடம் வரி அறவிடும் துயரம்

பெண்களைத் தலமையாக கொண்ட சிறு முயற்சியாளர்களையும் இறைவரித் திணைக்களத்தின் நடைமுறைக்கு உட்படுத்த எடுக்கும் நடவடிக்கையினால் வாழ்வியல் அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தில் தற்போது சுமார் 50 ஆயிரம் பெண் தலமைத்துவ குடும்பங்கள் வாழும் நிலையில் இவர்கள் தமது நித்திய வாழ்வியலிற்காக ஊறுகாய் , வடகம் , மற்றும் உணவு உற்பத்திகளில் ஈடுபட்டு பெரும் நெருக்கடியின் மத்தியில் வாழ்வாதாரந்தினை முன்கொண்டு செல்கின்றனர்

இவ்வாறு மேற்கொள்ளும் குடிசைக்கைத்தொழிலை ஒத்த முயற்சிக்காக சிலர் சமுர்த்திகளிலும் மேலும் பலர் வங்கிகளில் சிறு கடனையும் பெற்று தொழிலை மேற்கொள்ளும் நிலையில் அவற்றினை சந்தைப்படுத்த முயற்சிக்கும்போது பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் சோதனை எனத் தெரிவித்து ஓர் பெயர் சூட்டி அந்த லேபிள் தயாரிப்புத் திகதி மற்னும் முடிவுத் திகதிகள் அச்சிடப்பட வேண்டும். அவ்வாறான சூழலில் மட்டுமே சந்தைப்படுத்த முடியும். என்கின்றனர்.

இதன்காரணமாக சிறு முயற்சியாளர்கள் பொதுச் சுகாதார உத்தியோகத்தரின் கூற்றை ஏற்று பெயர் பொறிக்க முனைத்தால் பதிவு செய்யப்பட வேண்டும். எனத் தெரிவிக்கும் நிலையில் பிரதேச செயலகங்களில் பதிவினை மேற்கொண்டனர். இதன் பிரகாரம் தற்போது குறித்த பதிவு விபரங்களை சேகரித்த இறைவரிந் திணைக்களம் அவர்களிற்கும் வரி செலுத்துவதற்கான விபரம் கோரல் பத்திரங்களை அனுப்பி வைந்துள்ளனர்.

இதன் காரணமாக சிறு முயற்சியாளர்கள் கவலை தெரிவிக்கின்றமை தொடர்பில் இறைவரித் திணைக்களத்திடம் தொடர்புகொண்டு கேட்டபோது அந்தவகையான முயற்சியாளர்களிற்கு படிவம் அனுப்புவது கிடையாது. எனப் பதிலளித்தனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com