சற்று முன்
Home / செய்திகள் / சிரியப் படுகொலைகளைக் கண்டித்து யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

சிரியப் படுகொலைகளைக் கண்டித்து யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

சிரியாவில் இடம்பெற்று வருகின்ற இனப்படுகொலையை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று (01) இடம்பெற்றது.

இப்போராட்டம் இன்று காலை யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

கடந்த சில நாட்களாக சிரியாவில் உள்நாட்டுப் படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே இடம்பெற்றுவரும் யுத்தம் காரணாமா அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கொல்லப்படுவதை கண்டித்து இப்போராட்டம் இடம்பெற்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினர் இவ்விடயத்தில் மௌனம் காக்காது துரித நடவடிக்கையை எடுத்து சிரியாவில் நிரந்தர போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் இங்கு ஆர்ப்பாட்டக்காரர்களால் வலியுறுத்தப்பட்டது.

யாழ். மாவட்ட இளைஞர் சமூகத்தினர் மற்றும் யாழ். மாவட்ட முஸ்லிம்மக்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என பெரும்பாலானோர் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com