சற்று முன்
Home / செய்திகள் / சாவகச்சேரி வங்கியில் 17 இலட்சம் ரூபா கொள்ளை – கத்திமுனையில் பட்டப்பகலில் சம்பவம்

சாவகச்சேரி வங்கியில் 17 இலட்சம் ரூபா கொள்ளை – கத்திமுனையில் பட்டப்பகலில் சம்பவம்

ஏ9 பிரதான வீதியின் சாவகச்சேரி நகரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் இருந்து இன்று (19) காலை 8.30 மணிக்கு சுமார் 17 இலட்சம் ரூபா பணம் கத்தி முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இன்று காலை வழமை போல் நிதி நிறுவனத்தை திறந்த பணியாளர்கள், பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த பணத்தினை வங்கியில் வைப்பிலிடுவதற்காக எடுத்துள்ளனர்.

இதன்போது கத்தியோடு உள்நுழைந்த திருடன் அங்கிருந்தோரை அச்சுறுத்தி பணத்தினை கொள்ளையிட்டு சென்றுள்ளான்.

சந்தேகநபர் முகத்தை மூடும் விதமான தலைக்கவசம் அணிந்திருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

உடனடியாக சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com