சற்று முன்
Home / செய்திகள் / சாவகச்சேரியில் விபத்து ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்

சாவகச்சேரியில் விபத்து ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்

சாவகச்சேரி ஏ-9 வீதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தோடு,மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

இச் சம்பவம் நுணாவில் பொது நூலகத்துக்கு முன்பாக நேற்று இரவு 9.40 மணியளவில் இடம்பெற்றது.

டிப்பர் கனரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மீசாலை மேற்கைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்தார்.

மீசாலை மேற்கைச் சேர்ந்து மற்றைய நபர் படுகாயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

டிப்பர் சாரதியை சாவகச்சேரி காவல் துறையினர் கைது செய்துள்ளதோடு விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com