சற்று முன்
Home / செய்திகள் / சர்வதேசத்தின் கதவுகள் இனித் திறக்காது – அனந்தி ஆதங்கம் !

சர்வதேசத்தின் கதவுகள் இனித் திறக்காது – அனந்தி ஆதங்கம் !

தமிழ் பேசும் மக்களுக்காக இனியும் சர்வதேசத்தின் கதவுகள் திறக்கப்படப் போவதில்லை என்பதையே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் நிலைப்பாடு உணர்த்தியுள்ளதாக வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

சர்வதேச நாடுகளின் உதவியுடன் இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு நீதி கேட்டு நாம் முன்னெடுத்துவரும் போராட்டத்தில், எமக்காக இனிமேல் சர்வதேசத்தின் கதவுகளும் திறக்கப்போவதில்லை.

மனித உரிமைகளுக்காக குரல்கொடுப்பதற்கு சர்வதேச அளவில் மிக மோசமான சூழல் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹ{சைன், முதலாவது பதவிக் காலத்துடனேயே பணியில் இருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளார்.

இந்த விடயம் பெரும் அதிர்சியினையும் ஏமாற்றத்தினையும் தந்துள்ளது என்று அனந்தி சசிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

“எதிர்வரும் 2018 ஆம் ஆண்டே வெளியுறவுக் கொள்கை மூலம் நான் பெற்ற ஆணையின் இறுதிக் காலமாகும்.

இரண்டாவது முறையாகவும் மீண்டும் ஆணையாளர் பதவியை பொறுப்பேற்கப் போவதில்லை.” என்பதனை, மனித உரிமைகள் ஆணையாளரினால் அவரது பணியாளர்களுக்கு 20.12.2017 அன்று அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல் அறிக்கையின் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com