சற்று முன்
Home / ஜோதிடம் / சனிப் பெயர்ச்சி பலன்கள் – மிதுனம் (மிருகசீரிடம் 3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்)

சனிப் பெயர்ச்சி பலன்கள் – மிதுனம் (மிருகசீரிடம் 3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்)

மற்றவர்களை மகிழ்வித்து மகிழ்பவர்களே!

இதுவரை 6-ம் இடத்தில் இருந்து நன்மைகளைச் செய்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை 7-ம் இடத்தில் அமர்ந்து பலன் தர இருக்கிறார். கண்டகச் சனியாக இருப்பதால், எதிலும் கொஞ்சம் எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் வீண் விவாதங்கள் ஏற்படக்கூடும்.

விலை உயர்ந்த பொருள்கள், நகைகளைக் கவனமாகக் கையாளவும். வாழ்க்கைத் துணைக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். சிலர், வேலையின் காரணமாகக் குடும்பத்தைப் பிரிய நேரிடும். கூடுமானவரை சொந்த வாகனத்தில் இரவுநேரப் பயணம் செய்வதைத் தவிர்க்கவும்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்:

சனி பகவான் உங்கள் ராசியை பார்ப்பதால், அலர்ஜியால் தோலில் நமைச்சல்,கட்டி,முடி உதிர்வதற்கும் வாய்ப்புள்ளது. செரிமானக் கோளாறு வந்து நீங்கும். மறதியும், பித்தத்தால் தலைச்சுற்றலும் வந்து நீங்கும். சனிபகவான் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். அவருடன் வீண் விவாதங்கள் வந்து செல்லும். சனிபகவான் உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால், கையிருப்புகள் கரையும். வெளியிலும் கடன் வாங்க நேரிடும்.

வியாபாரிகளே!

கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்தவேண்டாம். கூட்டுத் தொழிலைத் தவிர்க்கவும். பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கவும். கடன் தருவதைத் தவிர்க்கவும். சிலருக்குக் கடையை மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சிலருக்கு பங்கு தாரர்களுடன் மோதல்கள் வரக்கூடும். அரிசி, பருப்பு மண்டி, கமிஷன், கெமிக்கல் வகைகள் ஆதாயம் தரும்.

உத்தியோகஸ்தர்களே! விமர்சனத்தைத் தவிர்க்க வும். எதிர்பார்க்கும் சலுகைகள் தாமதமாகவே கிடைக்கும். எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும். பழைய அதிகாரிகள் உதவி செய்வார்கள். ஒப்பந்தப் பத்திரங்களில் கையெழுத்து போடவேண்டாம். மாணவ – மாணவிகளே! படிப்பில் அலட்சியம் கூடாது. விளையாட்டின்போது கவனமாக இருக்கவும். கலைத்துறையினர்களே! சிறிய வாய்ப்புகளையும் அலட்சியப்படுத்தாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சி, அனுபவ அறிவால் உங்களை வெற்றிபெற வைக்கும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:

19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்னைகளில் இருந்து விடுபட புது வழி கிடைக்கும். முன்கோபம் விலகும். குடும்ப வருமானம் அதிகரிக்கும். மிருகசீரிடம் 3,4-ம் பாதம் மற்றும் புனர்பூசம் 1,2,3-ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் கிடைக்கும். ஆனால், திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர், நண்பர்களுடன் கருத்து மோதல்கள் ஏற்பட்டு நீங்கும்.

சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 மற்றும் 27.9.19 முதல் 24.2.20 மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், கணவன் – மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து நீங்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் கிடைக்கும். மிருகசீரிடம் 3,4 மற்றும் புனர்பூசம் 1,2,3-ம் பாதத்தில் பிறந்தவர்கள், எவரையும் விமர்சிக்கவேண்டாம்.

25.2.20 முதல் 16.7.20 மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனிபகவான் உங்களின் தைரிய ஸ்தானாதிபதியாகிய சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால், புதிய முயற்சிகள் வெற்றியடையும். இளைய சகோதரர்கள் பாசமழை பொழிவார்கள். உதவிகளும் கிடைக்கும். சொத்துச் சிக்கல் தீரும். அரசாங்க காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மிருகசீரிடம் 3,4 மற்றும் புனர்பூசம் 1,2,3-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் உண்டாகும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் அக்கறைக் காட்டுவது நல்லது.

சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்:

29.4.18 முதல் 11.9.18 மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால், செலவுகளைக் குறைத்து,சேமிக்கத் தொடங்குங்கள். சகோதர வகையில் மகிழ்ச்சி உண்டாகும். என்றாலும் அவர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம்.

சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 மற்றும் 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கரிப்பதால் தாயாரின் உடல் நிலை சீராகும். பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகக் கொஞ்சம் சேமிக்கத் தொடங்குவீர்கள். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால், பிரிந்திருந்த தம்பதி ஒன்றூசேர்வீர்கள். மகளுக்கு வரன் பார்க்கும்போது கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

சனிப் பெயர்ச்சி பலன்கள் – மீனம் – பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

எப்போதும் நல்லவழியில் செல்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் இருந்த சனிபகவான், 19.12.17 முதல் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com