சற்று முன்
Home / ஜோதிடம் / சனிப் பெயர்ச்சி பலன்கள் – ரிஷபம் (கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்)

சனிப் பெயர்ச்சி பலன்கள் – ரிஷபம் (கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்)

முயற்சியைக் கை விடாதவர்களே!

இதுவரை 7-ம் இடத்தில் இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை 8-ம் இடத்தில் சஞ்சரிக்க உள்ளார். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல் படவேண்டிய காலம் இது. மற்றவர்களை நம்பி ஏமாறவேண்டாம். குடும்பத்தில் சிலர் பிரச்னையை உண்டாக்க முயல்வார்கள். கவனம் தேவை.

மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க நேரிடும். முக்கிய பத்திரங் களில் கையெழுத்து போடுமுன், சட்ட நிபுணரை ஆலோசித்து முடிவெடுக்கவும். பூர்வீகச் சொத்துப் பங்கைப் போராடித்தான் பெற வேண்டி இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். சொத்து வாங்குவது விற்பதில் வில்லங்கம் ஏற்பட்டு நீங்கும். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருக்கும். சகோதரர்களுடன் மனவருத்தம் ஏற்படக்கூடும். உடல் நலனை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வது நல்லது.

சனி பகவான் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டை பார்ப்பதால், சாதுர்யமாகப் பேசுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். சனிபகவான் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால், தன்னைச் சுற்றி ஏதோ சதி நடப்பதாக சிலரை சந்தேகப்படுவீர்கள். சனிபகவான் 10-ம் வீட்டைப் பார்ப்பதால் வேற்றுமொழியினரால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

வியாபாரம் சுமார்தான். போட்டிகள் அதிகரிக்கும். பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். இரும்பு, கடல் உணவு வகைகள், ரசாயன வகைகள், கட்டட உதிரி பாகங்கள் மூலம் லாபம் வரும். பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது.

அலுவலகத்தில் கடுமையாக உழைத்தும் எந்தப் பயனும் இல்லையே என்று ஆதங்கப் படுவீர்கள். புது அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். எனினும் சம்பளம் உயரும். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள்.

மாணவ – மாணவிகளே!

அன்றைய பாடத்தை அன்றன்றே படிப்பது நல்லது. கலைத் துறையினர்களே! வேற்றுமொழி பேசுபவரால் முன்னேற்றம் உண்டு. புதிய வாய்ப்புகள் தேடி வரும். விமர்சனங்களையும், வதந்திகளையும் தாண்டி வெற்றி பெறுவீர்கள்.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, சிற்சில பிரச்னைகளில் சிக்கவைத்தாலும், கடின உழைப்பாலும் சமயோசித புத்தியாலும் உங்களைச் சாதிக்க வைக்கும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:

19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் திடீர் பணவரவு உண்டு. திருமணம், கிரகப் பிரவேசம் என வீடு களைகட்டும். கிருத்திகை 2,3,4 மற்றும் மிருகசீரிடம் 1,2-ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, இக்காலக்கட்டத்தில் புது வேலை கிடைக்கும். நவீன வாகனங்கள் வாங்குவீர்கள். அயல்நாடு சென்று வருவீர்கள். ரோகிணி நட்சத்திரத் தில் பிறந்தவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும்.

சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 மற்றும் 27.9.19 முதல் 24.2.20 மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், புதிய திட்டங்கள் நிறைவேறும். குடும்பத்தில் அமைதி நிலவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டு. எதிர்பார்த்த பணம் வரும். கிருத்திகை 2,3,4 மற்றும் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கூடுதல் நன்மைகள் நடக்கும். மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறு விபத்து, முன்கோபம், வீண் டென்ஷன், மனஉளைச்சல் ஆகியன வந்து செல்லும்.

25.2.20 முதல் 16.7.20 மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனிபகவான் உங்களின் ராசிக்கு சுகாதிபதியாகிய சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால், வீடு, மனை சேரும். புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ரோகிணி மற்றும் மிருகசீரிடம் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் கிடைக்கும். கார்த்திகை 2,3,4-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உடல் நலத்தில் அதிக அக்கறைக் காட்ட வேண்டும்.

சனிபகவானின் வக்கிர சஞ்சாரப் பலன்கள்:

29.4.18 முதல் 11.9.18 மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால் தடைப்பட்ட வேலைகள் முடியும் கணவன் – மனைவிக்கு இடையில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். வழக்குகள் சாதகமாகும். கடன் பிரச்னை தீரும்.

சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 மற்றும் 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத் திரத்தில் வக்கரிப்பதால், இக்காலக் கட்டத்தில் சளித்தொந்தரவு, காய்ச்சல், பல் வலி, பார்வைக்கோளாறு வந்து நீங்கும். குடும்பத் தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால் சகோதரர்கள் மற்றும் தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து போகும்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

சனிப் பெயர்ச்சி பலன்கள் – மீனம் – பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

எப்போதும் நல்லவழியில் செல்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் இருந்த சனிபகவான், 19.12.17 முதல் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com