சற்று முன்
Home / செய்திகள் / சட்டவிரோத மீன்பிடி – முல்லைத்தீவில் 24 மீனவர்களுக்கு விளக்கமறியல்

சட்டவிரோத மீன்பிடி – முல்லைத்தீவில் 24 மீனவர்களுக்கு விளக்கமறியல்

முல்லைத்தீவு புலிபாய்ந்தகல் பிரதேசத்தில் நேற்று முன்தினம் தொழிலிற்குச் செல்லத் தயாராக நின்ற திருகோணமலைசை சேர்ந்த 5 படகுகளை திணைக்கள அதிகாரிகள் திடீர்சோதனைக்கு உட்படுத்தியவேளை 5 படகுகளிலும் அனுமதி அற்ற முறையில் 5 சுருக்கு வலைகள் வைத்திருந்த 24 மீனவர்களையும் எதிர்வரும் 30ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

முல்லைத்தீவு கடலில் அனுமதி இன்றி சுருக்குவலை பயன்படுத்திய திருகோணமலையை சேர்ந்த 5 படகுகளை மாவட்ட நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றி நீதிமன்றில் முற்படுத்தினர். இதில் திருகோணமலைசை சேர்ந்த 5 படகுகளும் அனுமதி அற்ற இதனால் 5 சுருக்கு வலைகளும் 24 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 24 மீனவர்பளும் அனுமதி இன்றி சுருக்கு வலை பயன்படுத்திய குற்றச் சாட்டின் பேரில் நேற்றைய தினம் முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர் . குறித்த வழக்கை ஆராய்ந்த மாவட்ட நீதிபதி லெனின்குமார் சந்தேக நபர்கள் 24 பேரையும் எதிர்வரும் 30ம் திகதிவரையில் விளக்க மறியலில் வைக்க உத்தரிட்டார்.

இதேநேரம் மாத்தளன் பகுதியில் சட்ட விரோத மீன்பிடி முறையான டைனமற் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 450 கிலோ மீனையும் நேற்று முன்தினம் அதிகாரிகள் கைப்பற்றியதோடு குறித்த மீன்கள் தொடர்பில் நேற்று நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்தனர். இதனை ஆராய்ந்த நீதிபதி குறித்த மீன்களை அழிக்குமாறு உத்தரவிட்டார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com