சற்று முன்
Home / செய்திகள் / சட்டத்தரணி றோய் டிலக்சனின் வீடு புகுந்து தாக்குதல் – இளவாலையில் சம்பவம்

சட்டத்தரணி றோய் டிலக்சனின் வீடு புகுந்து தாக்குதல் – இளவாலையில் சம்பவம்

யாழ்.இளவாலை பகுதியில் உள்ள சட்டத்தரணி றோய் டிலக்சன் என்பவருடைய வீட்டுக்குள் நுழைந்து வாள்வெட்டு குழு ரவுடிகள் தாக்குதல் நடாத்தியிருக்கின்றனர்.

நேற்று மாலை இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள சட்டத்தரணியின் வீட்டுக்குள் நுழைந்த வாள்வெட்டு குழு ரவுடி கும்பல் அங்கு தாக்குதல் நடாத்தியது.

இந்த தாக்குதலினால் பாதிப்பில்லாதபோதும், அச்சுறுத்தும் வகையில் இந்த தாக்குதல் சம்பவம் நடாத்தப்பட்டிருக்கின்றது.

இது தொடர்பில் குறிப்பிட்டுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன்,

மே 18 தனிமைப்படுத்தல் தொடர்பான வழக்கில் 20 சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆயர். பின்னர் எனது அலுவலகத்தில் இருந்து வீடு சென்ற எனது கனிஷ்ட சட்டத்தரணி ஒருவர் படையினரால் அச்சுறுத்தல். பின்னர் நேற்று முன்தினம் எனது மற்றொரு கனிஷ்ட சட்டத்தரணியும் வலி தென் மேற்கு பிரதேச சபையின் வேட்பாளராக போட்டியிட்டவருமான றோய் டிலக்சனின் வீட்டிற்குள் நள்ளிரவில் புகுந்து வாள்களால் கதவும் மோட்டார் சைக்கிளும் வெட்டி சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. என்னதான் நடக்கிறது??? என கேள்வி எழுப்பியுள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com