சற்று முன்
Home / செய்திகள் / கோஸ்டி மோதலிற்குச் சென்ற 13 இளைஞர்கள் பளை பொலிசாரால் கைது

கோஸ்டி மோதலிற்குச் சென்ற 13 இளைஞர்கள் பளை பொலிசாரால் கைது

தென்மராட்சி பகுதியில் கோஸ்டி மோதலுக்கு சென்ற 13 இளைஞர்களை பளை பொலிசார் மடக்கி பிடித்துள்ளனர்.

சாவகச்சேரி பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் தம்மை ” ஐ ” குழு எனவும் ” சவா ” குழு எனவும் அடையாளப்படுத்தி கொண்டு வாள் வெட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அக் குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் எழுதுமட்டுவாள் பகுதியில் கோஸ்டி மோதல் ஒன்றுக்கு தயாராக வாள்கள் , இரும்பு கம்பிகள் . பெல்லுகளுடன் 13 இளைஞர்கள் ” வடி” ரக வாகனத்தில் சென்றுள்ளனர்.

இளைஞர்கள் கோஸ்டி மோதலுக்கு தயாராக எழுதுமட்டுவாழ் பகுதிக்கு வருகின்றனர் எனும் இரகசிய தகவல் கொடிகாம பொலிசாருக்கு கிடைக்க பெற்றதை அடுத்து இளைஞர்களை மடக்கி பிடிக்க கொடிகாம பொலிசார் எழுமட்டுவாழ் பகுதியில் தயார் நிலையில் இருந்த போது , 13 பேரைக் கொண்ட இளைஞர் குழு வாகனத்தில் மருதங்கேணி பகுதியூடாக தப்பி சென்றுள்ளனர்.

அது குறித்து பளை பொலிசாருக்கு, கொடிகாம பொலிசார் அறிவித்ததை அடுத்து , பளை பொலிசார் மருதங்கேணியில் உள்ள பளை பொலிசாரின் காவலரணுக்கு அறிவித்துள்ளனர்.

அதனை அடுத்து மருதங்கேணி காவலரணில் தயார் நிலையில் இருந்த பளை பொலிசார் இளைஞர்களின் வாகனத்தை மடக்கி பிடித்தனர்.

வாகனத்தில் இருந்த 13 இளைஞர்களையும் கைது செய்த பொலிசார் , வாகனத்தில் இருந்து வாள்கள் , இரும்பு கம்பிகள் , பொல்லுகள் என்பவற்றையும் மீட்டுள்ளனர்.

கைது செய்யபட்ட 13 இளைஞர்களையும் பளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com