சற்று முன்
Home / கல்வி / கோப்பாய் ஆசிரிய கலாசாலை பதிவுகள் ஆரம்பம்!

கோப்பாய் ஆசிரிய கலாசாலை பதிவுகள் ஆரம்பம்!

கோப்பாய் ஆசி­ரிய கலா­சா­லையில் ஈராண்டு பயிற்­சியை மேற்­கொள்­வ­தற்­காக 2017/2018 கல்­வி­யாண்­டிற்­கான ஆசி­ரிய மாண­வர்­களின் பெயர் விப­ரங்கள் கோப்பாய் ஆசி­ரிய கலா­சா­லைக்கு கிடைக்­கப்­பட்­டுள்­ளன.

அந்த வகையில் தெரிவு செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்­கான பதி­வுகள் எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் 6 ஆம் திகதி புதன்­கி­ழமை ஆரம்­ப­மாக உள்­ளன என்றும் அனை­வ­ரையும் அன்­றைய தினம் தங்கள் பதி­வு­களை மேற்­கொண்டு தொடர்ந்து பயிற்­சியில் ஈடு­ப­டும்­படி அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கோப்பாய் ஆசி­ரிய கலா­சா­லைக்குத் தெரிவு செய்­யப்­பட்ட மாண­வர்­க­ளுக்­கான அனு­ம­திக்­க­டிதம் தபா­லி­டப்­பட்­டுள்­ள­துடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் பாட­சாலை விடுகை அனு­ம­தி­யோடு கலா­சா­லைக்கு வருகை தரு­மாறு கோப்பாய் ஆசி­ரிய கலா­சாலை அதிபர் வீ.கரு­ண­லிங்கம் அறி­வித்­துள்ளார்.

ஆரம்பக் கல்வி, சங்­கீதம், இந்து சமயம், கணிதம், விவ­சாயம், வர்த்­தகம், விசேட கல்வி, மனைப்­பொ­ரு­ளியல் ஆகிய பாட­நெ­றி­க­ளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள ஆசிரிய மாணவர்களே அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About Sujitha Thurairajan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com