சற்று முன்
Home / செய்திகள் / கொடிகாமத்தில் பொலிஸ் வாகனத்தை கடத்தியதால் பரபரப்பு

கொடிகாமத்தில் பொலிஸ் வாகனத்தை கடத்தியதால் பரபரப்பு

“கொடிகாமத்தில் பொலிசாரின் வாகனத்தை கடத்திச் சென்றவர் பொலிசார் ஒருவரையும் தாக்கிவிட்டு தலைமறைவாகியதால் அப்பகுதியில் சில மணி நேரம் பதற்றம் ஏற்பட்டது.

எனினும் பொலிஸாரின் வாகனத்தை எடுத்துச் சென்றவர் அதனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகிய நிலையில் வாகனம் மீட்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று (11) செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

“விசாரணையின் நிமிர்த்தம் கொடிகாமம் பொலிசார் வாகனத்தை வீதியில் நிறுத்திவிட்டு வீடு ஒன்றுக்குள் சென்றிருந்ததாகக் கூறப்படுகின்றது. வாகனத்தின் திறப்பும் கழற்றப்படவில்லை.

இந்நிலையில் அந்தப் பகுதியால் வந்த ஒருவர் வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளார். இதனால் பதற்றமடைந்த பொலிஸார் வாகனத்தேடி நான்கு திசையும் தேடியலைந்துள்ளனர்.

இந்நிலையில் கொடிகாமம் ஆலடிப் பகுதியில் மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகிய நிலையில் வாகனத்தை மீட்டுள்ளனர்.

இது தொடர்பில் குறிப்பிட்ட கொடிகாமம் பொலிசார், வாகனத்தை எடுத்துச் சென்றவர் மதுபோதையிலிருந்தாகவும் அவர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார் எனவும் வாகனம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.

இதேவேளை, கொடிகாமம் பாலாவிப் பகுதியில் இடம்பெறும் மணல் கடத்தலைத் தடுக்கும் நோக்கில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை அதிலிருந்து திசை திருப்பும் நோக்கில் நன்கு திட்டமிடப்பட்டு வாகனம் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com