சற்று முன்
Home / செய்திகள் / கொக்குவிலில் மீட்கப்பட்டு உரிமை கோரப்படாத பெருந்தொகைப் பணம் – அரசுடமையாக்க நடவடிக்கை

கொக்குவிலில் மீட்கப்பட்டு உரிமை கோரப்படாத பெருந்தொகைப் பணம் – அரசுடமையாக்க நடவடிக்கை

கொக்குவில் இலங்கை வங்கிக் கிளைக்கும் குளப்பிட்டிச் சந்திக்கும் இடையில் கடந்த 26.04.2018 அன்று மீட்கப்பட்ட பெருந்தொகைப் பணத்தினை இதுவரையான காலப்பகுதியில் எவரும் உரிமைகோரி ஆதாரங்காட்படிப் பெற்றுக்கொள்ளாத நிலையில் அப்பணத்தினை அரசுடமையாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த பணத்தினை கண்டெடுத்திருந்த அஞ்சல் ஊழியர் ஒருவர் அதனை கொக்குவில் அஞ்சல் அலுவலக அதிபரிடம் ஒப்படைத்திருந்தார். பின்னர் பணம் கண்டெடுக்கப்பட்டுள்ளமை குறித்து பத்திரிகைகள் மற்றும் இணைய ஊடகங்களில் செய்திகள் பிரசுரிக்கப்பட்டது. வாகீசமும் குறித்த செய்தியினைப் பிரசுரித்திருந்தது.

எனினும் இன்றுவரை (10.07.2018) குறித்த பணத்தினை கோரி எவரும் வருகைதந்திருக்கவில்லை என தெரிவித்த கொக்குவில் அஞ்சல் அலுவலகத்தினர். ஓரிரு தினங்களில் குறித்த பணத்தினை அரசுடமையாக்குவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com