சற்று முன்
Home / செய்திகள் / கேப்பாபுலவு ஒரு பகுதி விடுவிப்பு !

கேப்பாபுலவு ஒரு பகுதி விடுவிப்பு !

கேப்பாபுலவு மக்களுக்கு சொந்தமான காணிகளில் படையினர் அபகரித்துள்ள காணிகளில் இருந்து 133.4 ஏக்கர் காணிகள் இன்று மக்கள் முன்னிலையில் படைத்தரப்பில் இருந்து மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

காணி கையளிக்கும் நிகழ்வு கேப்பாபுலவு மக்கள் வாழ் இடத்தில் படையினரின் ஏற்பாட்டில் இன்று காலை நடைபெற்றுள்ளது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புணர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சின் அபிவிருத்தி மேலதிக செயலாளர் செந்தில் நந்தனன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தளபதி துஷ்யந்த ராஜகுரு மற்றும் மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன்,கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் சி குணபாலன்,மற்றும் படைத்தளபதிகள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டுள்ளார்கள்.

இதன்போது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தளபதி துஷ்யந்த ராஜகுரு மக்களின் காணிகளின் உரிமையினை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புணர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சின் அபிவிருத்தி மேலதிக செயலாளர் செந்தில் நந்தனனிடம் கையளிக்க அவர் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்துள்ளார்கள்.

இதன்போது கேப்பாபுலவு பகுதியில் 68 குடும்பங்களுக்கு சொந்தமான 111.5 ஏக்கர் காணிகளும் சீனியாமோட்டை பகுதியில் 17குடும்பங்களுக்கு சொந்தமான 21.84 ஏக்கர் காணிகளுமாக மொத்தமாக 85 குடும்பங்களுக்கு சொந்தமான 133.34 ஏக்கர் காணிகள் இன்று கையளிக்கப்பட்டுள்ளது

காணிகளை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் குறித்த காணிகள் நில அளவீடு செய்து உரியவகையில் மக்களிடம் கையளிக்கப்படும் எனவும் வருகிற 1 ம் திகதி வற்றாப்பளை புதுக்குடியிருப்பு பிரதான வீதியை மறித்து அமைக்கப்பட்டுள்ள இந்த முகாமை அகற்றி பிரதான பாதை திறந்து விடப்படும் எனவும் அத்தோடு மக்களும் தங்களுடைய காணிகளுக்கு செல்லலாம் எனவும் தெரிவித்தார்

இந்த நிகழ்வில் 64 ஆவது படைஅணியின் 1ஆவது படைப்பரிவு தளபதி பிரிகேடியர் நிஷாந்த மானகே வரவேற்புரையினை நிகழ்த்த மாவட்ட அரசாங்க அதிபர் மற்றம் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புணர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சின் அபிவிருத்தி மேலதிக செயலாளர் செந்தில் நந்தனன் ஆகியோர் கருத்துரைகளை நிகழ்த்தியுள்ளர்கள்.

காணிகளை பெறுவதற்காக சென்ற மக்கள் இதுவரை போராட்டத்தைதலைமையேற்று நடாத்திய ஆறுமுகம் வேலாயுதம் பிள்ளை அவர்களை பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். காணி விடுவிப்பை தொடர்ந்து மக்கள் முழுமையான காணி விடும்வரை போராட்டம் தொடருமென தெரிவித்துள்ளனர்.

கடந்த மாசிமாதம் முதலாம் திகதி 138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு மக்கள் போராட்டத்தை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com