சற்று முன்
Home / செய்திகள் / குற்றம்சாட்டப்பட்டுள்ள படை அதிகாரிகளை பணியிலிருந்து இடை நிறுத்துங்கள்!

குற்றம்சாட்டப்பட்டுள்ள படை அதிகாரிகளை பணியிலிருந்து இடை நிறுத்துங்கள்!

கடத்தல் மற்றும் காணாமல்போகச்செய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டினை எதிர்கொண்டுள்ள ஆயுதபடையினர் மற்றும் பொலிஸாரை பணியிலிருந்து இடைநிறுத்துமாறு காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் பரிந்துரை செய்துள்ளது.

காணாமல்போனவர்கள் அலுவலகம் சமர்ப்பித்துள்ள இடைக்கால அறிக்கையிலேயே இந்த பரிந்துரை இடம்பெற்றுள்ளது.

கடத்தல் மற்றும் காணாமல்போகச்செய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டினை எதிர்கொண்டுள்ள ஆயுதபடையினர் மற்றும் பொலிஸாரை விசாரணைகள் முடிவடையும் பணியிலிருந்து இடைநிறுத்தவேண்டும் அவர்களை இடமாற்றம் செய்யக்கூடாது என காணாமல்போனோர் குறித்த அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதேபோன்று குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்ககூடாது அல்லதுவேறு உயர் பதவிகளை வழங்ககூடாது எனவும் காணாமல்போனோர் குறித்த அலுவலகம் பரிந்துரை செய்துள்ளது

கடத்தல் மற்றும் காணாமல்போகச்செய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டுகளிற்கு உள்ளாகியுள்ள சில அதிகாரிகள் தொடந்தும் அதே உயர் பதவிகளில் நீடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர் என இடைக்கால அறிக்கையில் தெரிவித்துள்ள காணாமல்போனோர் குறித்த அலுவலகம இதன் மூலம் அவர்கள் விசாரணைகளில் தாக்கம் செலுத்தும் நிலை காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளது.

விசாரணைகளிற்கு உதவும் தகவல்களை வழங்க முன்வந்த படையினர் துன்புறுத்தல்களை சந்தித்த சம்பவங்களும் உள்ளன என காணாமல்போனோர் குறித்த அலுவலகம் தனது இடைக்கால அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது.

நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்கொன்றில் சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ள படைத்தரப்பை சேர்ந்த அதிகாரியொருவர் இன்னமும் பணியிலிருந்து இடைநீக்கப்படவில்லை அவர் தொடர்ந்தும் அதிகாரியாக பணியாற்றுகின்றார் எனவும் காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் தெரிவித்துள்ளது.

About Sujitha Thurairajan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com