சற்று முன்
Home / செய்திகள் / குருகுலத்தைக் காப்பாற்ற குத்துக்கரணம் போடும் நாட்டாமை – போராட்டங்கள் நடத்த முஸ்தீபு

குருகுலத்தைக் காப்பாற்ற குத்துக்கரணம் போடும் நாட்டாமை – போராட்டங்கள் நடத்த முஸ்தீபு

தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்றும், இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையாக விசாரணை செய்யப்படும் வரை பதவியில் இருந்து விலகியிருப்பதாகவும் கல்வி அமைச்சர் குருகுலராஜா இராஜினாமாக் கடிதம் கொடுத்துள்ளார். எனினும் இதன் பின்னால் தீட்டப்பட்டுவரும் சதி முயற்சி தொடர்பில் கிடைத்துவரும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

கிளிநொச்சியில் செல்வக்குடன் திகழும் பாராளுமன்ற உறுப்பினரின் ஒருவரின் ஆலோசனையில் பேரிலேயே குருகுலராஜா தனது பதவியை இராஜினாமாச் செய்யதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குருகுலராஜா இராஜினாமா செய்த பின்னணியில் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக கிளிநொச்சியிலுள்ள பாடசாலைகள் மற்றும் பொது அமைப்புக்களைத் தூண்டிவிட்டு முதலமைச்சருக்கு எதிராகவும் முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவிற்கு எதிராகவும் போராட்டங்களை முன்னெடுக்க ரகசிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் பின்னணியிலேயே கிளிநொச்சியைச் சேர்ந்த சில அமைப்புக்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு பாரதிபுரம் பாடசாலையில் மாணவி ஒருவர் அதிபரினால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார் என மாகாண அமைச்சர்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிட்ட விடயம் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது, அபாண்டமானது, அவ்வாறு ஒரு சம்பவமே நடக்கவில்லை என கடும் கண்டம் தெரிவித்து முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளன.
இவ்வாறான எதிர்ப்பு நடவடிக்கைகள் இந்த வாரம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு போராட்டங்கள் நிகழ்த்தப்படும் என தெரியவருகின்றது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com