சற்று முன்
Home / செய்திகள் / குமரப்பா புலேந்திரன் நினைவுத் தூபியால் வல்வெட்டித்துறை நகரசபையில் குழப்பம்

குமரப்பா புலேந்திரன் நினைவுத் தூபியால் வல்வெட்டித்துறை நகரசபையில் குழப்பம்

யாழ்ப்பாணம் வல்­வெட்­டித்­துறை தீரு­வி­லில் கும­ரப்பா, புலேந்­தி­ரன் உட்­பட 12 போரா­ளி­க­ளுக்­கான நினை­வுத் தூபி அமைப்­பது தொடர்பான விவாதத்தால் இன்றைய சபை அமர்வில் குழப்ப நிலமை ஏற்பட்டது.

விடுதலைப் புலிகளுக்கு மட்டுமல்லாது மாற்று இயக்கங்களுக்கும் சேர்த்து நினைவுத் தூபி அமைக்க வேண்டும் என சில உறுப்பினர்கள் முரண்பட்டு குழப்பம் விளைவித்துள்ளனர்.

வல்வெட்டித்துறை நகர சபையின் அமர்வு இன்று காலை இடம்பெற்றது. அதில் சிலை அமைப்பது தொடர்பான விவாதம் இடம்பெற்றது.

அதற்கு உறுப்பினர்கள் மாற்றுக் கருத்துக்களைத் தெரிவித்தமையால் சபையின் குழப்ப நிலமை ஏற்பட்டது.

சபை தற்போது 15 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் சேதமாக்கப்பட்ட நினைவுத் தூபியை மீள அமைக்க முற்பட்ட போது குழப்பம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com