சற்று முன்
Home / செய்திகள் / கிளிநொச்சி வலயத்தில் 888 ஆசிரியர்கள் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் !!

கிளிநொச்சி வலயத்தில் 888 ஆசிரியர்கள் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் !!

கிளிநொச்சி கல்வி வலயத்தில் கல்வி கற்பிக்கும் 2101 ஆசிரியர்களில் 1213 ஆசிரியர்கள் வெளிமாவட்டத்தில் இருந்து வந்து கற்பிப்பவர்கள் என வலயக்கல்வி பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக வடமாகாணத்தில் வதிவிட மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டத்திற்கு சென்று கற்பிக்கும் ஆசிரியர்களின் விபரங்களை கேட்டபோதே அவ்வாறு தெரிவித்தார்.

அதேவேளை தென்மராட்சி வலயத்தில் 1058 ஆசிரியர்கள் கல்வி கற்பிப்பதாகவும், வெளிமாவட்டத்தை வதிவிடமாக கொண்ட ஆசிரியர்கள் எவரும் கற்பிக்க வில்லை என தென்மராட்சி கல்வி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் ல. லிங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமராட்சி கல்வி வலயத்தில் 2017ஆம் ஆண்டு 1579 ஆசிரியர்களும் , 2018 ஆம் ஆண்டு 1684 ஆசிரியர்களும் கல்வி கற்பிப்பதாகவும் , வதிவிட மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டத்திற்கு சென்று கற்பிக்கும் ஆசிரியர்களின் விபரங்கள் எனும் கேள்வி பொருத்தமில்லை என வடமராட்சி கல்வி வலய கல்விப் பணிப்பாளர் யோ. ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

துணுக்காய் கல்வி வலயத்தில் 578 ஆசிரியர்கள் கல்வி கற்பிப்பதாகவும் , வதிவிட மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டத்திற்கு சென்று கற்பிக்கும் ஆசிரியர்களின் விபரங்கள் எனும் கேள்வி தமது வலயத்தில் இதற்கு பொருத்தமான தகவல்கள் இல்லை எனவும் துணுக்காய் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.பிருந்தா தெரிவித்துள்ளார்.

தீவக கல்வி வலயத்தில் 759 ஆசிரியர்கள் கல்வி கற்பிப்பதாகவும் வதிவிட மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டத்திற்கு சென்று கற்பிக்கும் ஆசிரியர்களின் விபரங்கள் எனும் கேள்விக்கு வினாவில் தெளிவில்லை எனவும் தீவக கல்வி வலய தகவல் உத்தியோகஸ்தர் சாரங்கன் தெரிவித்துள்ளார்,

வடமாகாண கல்வி அமைச்சிடம் கடந்த நவம்பர் மாதம் 13ஆம் திகதி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக வடமாகாண ஆசிரியர்களின் (மாவட்ட ரீதியாக) எண்ணிக்கை ? , வதிவிட மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டத்திற்கு கற்பிக்க செல்லும் ஆசிரியர்களின் (மாவட்ட ரீதியாக) எண்ணிக்கை ? ஆகிய இரு கேள்விகள் கேட்கப்பட்டன.

அதனை ,மாகாண கல்வித் திணைக்களத்திற்கு கல்வி அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதனை மாகாண கல்வித்திணைக்களம் 2018. 11. 21. திகதியிடப்பட்ட கடிதம் மூலம் வடமாகாணத்தில் உள்ள 12 கல்வி வலயங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில் வடமராட்சி , தென்மராட்சி , தீவகம் , கிளிநொச்சி மற்றும் துணுக்காய் ஆகிய ஐந்து கல்வி வலயங்கள் மாத்திரமே ஐனவரி 27ஆம் திகதி வரையில் பதில் அனுப்பியுள்ளன. ஏனைய யாழ்ப்பாணம் , வலிகாமம் , முல்லைத்தீவு , மன்னார் , மடு , வவுனியா வடக்கு மற்றும் வவுனியா தெற்கு ஆகிய ஏழு கல்வி வலயங்கள் பதில் அனுப்பவில்லை. என்பன பதில் அனுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை வடமாகாண கல்வி அமைச்சிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கல்வி அமைச்சே தரவுகளை பெற்று பதில் அளிக்கும் பொறுப்புடையதாகும், அத்துடன் தகவல்கள் கோரப்பட்டு 28 வேலை நாட்களுக்குள் தகவல்கள் கொடுக்கப்பட வேண்டும் என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கூறப்பட்டு உள்ள போதிலும் , 50 வேலை நாட்களை தாண்டியும் தகவல்கள் தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை !

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க அனுமதிக்க முடியாது ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com