சற்று முன்
Home / செய்திகள் / கிளிநொச்சியில் நாளை வேட்புமனுத் தாக்கல் – முன்னேற்பாடு பூர்த்தி

கிளிநொச்சியில் நாளை வேட்புமனுத் தாக்கல் – முன்னேற்பாடு பூர்த்தி

2018ஆண்டு உள்­ளூராட்­சி­சபைத் தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுத் தாக்­கல் கிளி­நொச்சி மாவட்­டத்­தில் நாளை திங்­கட்­கி­ழமை ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

மாவட்­டத்­தில் தேர்­தல் காலத்­தில் மேற்­கொள்­ள­வேண்­டிய பாது­காப்­பு­கள் தொடர்­பில் மாவட்­டச் செய­லா­ளர் தலை­மை­யில் சிறப்­புக் கலந்­து­ரை­யா­டல் இடம்­பெற்­றுள்­ளது.

இந்தச் சந்­திப்­புத் தொடர்­பில் மாவட்­டச் செய­லர் தெரி­வித்­த­தா­வது:

நாளை 18ஆம் திக­தி­மு­தல் 21ஆம் திக­தி­வ­ரை­யில் வேட்­பு­ ம­னுத் தாக்­கல் இடம்­பெ­ற­வுள்­ளது.

இதன்­பி­ர­கா­ரம் மாவட்­டத்­தில் உள்ள கரைச்சி, பூந­கரி, பச்­சி­லைப்­பள்ளி ஆகிய மூன்று சபை­க­ளுக்­கும் கட்­டுப்­ப­ணம் செலுத்­தும் நட­வ­டிக்கை ஏற்­க­னவே ஆரம்­பித்­துள்­ளது. திங்­கட்­கி­ழமை முதல் வேட்­பு­ம­னுத் தாக்­க­லும் ஆரம்­ப­மா­கின்­றது.

இக் காலத்­தில் மேற்­கொள்­ள­வேண்­டிய பாது­காப்­புப் பணி­கள் குறித்து கவ­னம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. மாவட்­டச் செய­ல­கத்தை நாடி­வ­ரும் மக்­க­ளுக்குப் பாதிப்­பின்றி பணி­க­ளைத் தொட­ர­வேண்­டும். குறித்த சந்­திப்­பில் மாவட்­டத்­தின் மூத்த பொலிஸ் அதி­கா­ரி­க­ளும் கலந்­து­கொண்­ட­னர்.

பொலி­ஸார் முதல் சகல தரப்­பி­ன­ருக்­கும் உரிய அறி­வு­றுத்­தல் வழங்­கப்­பட்­டுள்­ளது. அதன் பிர­கா­ரம் பொலி­சா­ரும் தமது கட­மையை மேற்­கொள்­வர் – –என்­றார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com