சற்று முன்
Home / செய்திகள் / கார்களில் பதுக்கிச் சென்ற மது பானங்கள் – நெல்லியடியில் நால்வர் கைது

கார்களில் பதுக்கிச் சென்ற மது பானங்கள் – நெல்லியடியில் நால்வர் கைது

நெல்லியடி பொலிசாரினால் முன்னெடுக்கப்பட்ட விசேட வீதி சோதனை நடவடிக்கைகளின் போது அனுமதி பத்திரமின்றி பெருமளவான மதுபான போத்தல்களை கொண்டு சென்றனர் எனும் குற்றசாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
நெல்லியடி போலீசார் தமது பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில்  நேற்றைய தினம் புதன்கிழமை விசேட வீதி சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர். அதன் போது நான்கு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அனுமதி பத்திரமின்றி பெருமளவான மதுபான போத்தல்களை கொண்டு சென்ற நால்வரை கைது செய்துள்ளனர்.
நேற்றைய தினம் மதுபான விற்பனை நிலையங்களை திறக்க அனுமதிக்கப்பட்டதை அடுத்து பலரும் முண்டியடித்து வரிசையில் நின்று மதுபானத்தை கொள்வனவு செய்திருந்தனர். சிலர் அளவுக்கு அதிகமாக கொள்வனவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com