சற்று முன்
Home / செய்திகள் / காணாமல் போன எமது தந்தையை கைதிகள் உண்ணாவிரதப் படம் ஒன்றில் பார்த்தோம் !

காணாமல் போன எமது தந்தையை கைதிகள் உண்ணாவிரதப் படம் ஒன்றில் பார்த்தோம் !

2002 – 2003 காலப்பகுதியில் சிறையில் இருப்பவர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது எடுக்கப்பட்டதாக பத்திரிகை ஒன்றில் வெளிவந்த புகைப்படத்தில் எனது தந்தையைக் கண்டோம் ஆனால் அது தொடர்பில் விசாரித்தபோது எமக்கு எதுவித பதிலும் வழங்கப்படவில்லை என காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைக்குழுமுன் சாட்சியமளித்த குருநகரைச் சேர்ந்த அன்ரன் சுதாகரன் (மகன்) தெரிவித்துள்ளார்.  

07.11.1993 ஆம் ஆண்டு கடற்தொழிலுக்குச் சென்ற என் தந்தை ஆசீர்வாதம் அன்ரன் (தற்போது 54 வயது) மற்றும் இருவர் மீது துப்பாக்கிச் சுடு நடத்தப்பட்டது மற்றைய இருவரும் படகில் இருந்துது நீருக்குள் குதித்துத் தப்பிவிட்டனர். அப்பாவிற்கு காலில் துவக்குச் சூடு பட்டதால் தப்பிக்க முடியவில்லை. அப்போது அங்கு வந்த கடற்படையினர் அப்பாவை வானகத்தில் ஏற்றிக் கொண்டு சென்றதாக மறைய இருவரும் தெரிவித்தனர்.

2002 – 2003 காலப்பகுதியில் சிறையில் இருப்பவர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது எடுக்கப்பட்டதாக பத்திரிகை ஒன்றில் வெளிவந்த புகைப்படத்தில் எனது தந்தையைக் கண்டோம் ஆனால் அது தொடர்பில் விசாரித்தபோது எமக்கு எதுவித பதிலும் வழங்கப்படவில்லை. ஆனால் 2003 ஆம் ஆண்டு எமது வீட்டிற்கு வந்த 512 ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த படையினர் சிறையில் இருந்து ஒருவர் தப்பிவிட்டார் உங்கள் வீட்டிற்கு வந்தவரா என விசாரித்துச் சென்றனர்.

சிறையில் இருந்து விடுதலையாகிவந்த முஸ்லீம் அண்ணா ஒருவர் சம்மாட்டியை ஜெயியில் கண்டேன் என கூறிவிட்டு வெளிநாடு சென்றுவிட்டார். எனது அப்பாவையும் கடற்தொழிலாளிகள் சம்மாட்டி என்றுதான் அழைப்பார்கள். எனவே எனது அப்பா எங்கோ ஒரு ஜெயிலில் தான் வைக்கப்பட்டிருக்கிறார் என நம்புகின்றோம் என தெரிவித்தார்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com