சற்று முன்
Home / செய்திகள் / காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வடமராட்சியில் கண்டன ஆர்ப்பாட்டப் பேரணிக்கு அழைப்பு

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வடமராட்சியில் கண்டன ஆர்ப்பாட்டப் பேரணிக்கு அழைப்பு

யாழ் வடமராட்சி கிழக்கு மக்களினால் ஆரம்பிக்கப்பட்ட காணாமல் போன தமது உறவுகளைத் தேடிக் கண்டறியும் போராட்டம் நாளை (15.03.2018) வியாழக் கிழமை ஓராண்டு நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு மாபெரும் கண்டனப் பேரணியும்,கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.

வடமராட்டசி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தின் முன்பாக காணமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டறியும் அமைப்பால் கடந்த வருடம் 15.03.2017 ஆரம்பிக்கப்பட்ட தமது உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறு கோரி தொடர் போராட்டத்தினை ஆரம்பித்தனர்.

இது தொடர்பில் குறிப்பிட்ட வடமராட்சி கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகைத் தேடி கண்டறியும் அமைப்பு அழைப்பு ,

வடக்கில் தொடர்சியா காணாமல்ப் போனவர்களின் உறவுக்ள நாம் தினமும் கண்ணீரோடு போராடி வருகிறோம்,இதனை எமது அரசியல் தலைமைகள் கூட கவனிக்காத நிலை உள்ளது.இந்த நிலையில் ஐ.நா மனித உரிமை ஆணையகத்தில் இடம்பெற்றுவரும் அமர்வுகளில் இலங்கையில் இடம்பெற்ற அநீதிகள் மற்றும் படுகொலைகள்,வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது விசாரணைகளை சர்வதேசப் பொறிமுறைக்குள் உள்வாங்கப்பட்டு,பாதிக்கப்பட் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டி முன்னெடுக்கும் இப் போராட்டத்திற்கு கட்சி பேதமின்றி அரசியல்த் தலைவர்களையும் பொது மக்களையும் கலந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com