சற்று முன்
Home / செய்திகள் / கல்வியில் முதலிடத்தில் இருந்ததால்தான் எங்கள் நூலகம் எரிக்கப்பட்டது – ஆளுநருக்கு நெத்தியடிகொடுத்த மாவை

கல்வியில் முதலிடத்தில் இருந்ததால்தான் எங்கள் நூலகம் எரிக்கப்பட்டது – ஆளுநருக்கு நெத்தியடிகொடுத்த மாவை

81ம் ஆண்டு எரித்து அழித்த புகை படிந்து கரை படிந்த இந்த யாழ்ப்பாணம் நூலகம் இன்று பூச்சுப் பூசப்பட்டுள்ளது. ஆளுநர் சொன்னார் நாட்டில் கல்வியில் முதலிடத்தில் யாழ்ப்பாணம் இருந்ததாக உண்மைதான. அந்த முதலிடத்தை அழிப்பதற்காகவே எமக்கு கல்வி வழங்கிய இந்த நூலகம் எரிக்கப்பட்டது. என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராயா தெரிவித்தார்.

இந்தியாவின் தமிழ் நாட்டு அரசாங்கத்தினால் யாழ்ப்பாணம் நூலகத்திற்கு நல்ல நண்பன் புத்தகம் என்னும் திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் நூல்களும் பாடசாலைகளின் நூல் கொள்வனவிற்கான பணம் வழங்கும் நிகழ்வும் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் நூலகத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் இங்கே தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,

அழிந்துபோன எமது தேசத்தில் இந்த நூலகம் 81ம் ஆண்டே 90 ஆயிரம் நூலகத்தை கொண்டிருந்த்து. அந்த நிலையிலேயே அன்று எரிக்கப்பட்டது. அந்த
81ம் ஆண்டு எரித்து அழித்த புகை படிந்து கரை படிந்த இந்த யாழ்ப்பாணம் நூலகம் இன்று பூச்சுப் பூசப்பட்டுள்ளது. ஆளுநர் சொன்னார் நாட்டில் கல்வியில் முதலிடத்தில் யாழ்ப்பாணம் இருந்ததாக உண்மைதான. அந்த முதலிடத்தை அழிப்பதற்காகவே எமக்கு கல்வி வழங்கிய இந்த நூலகம் எரிக்கப்பட்டது. இதேநேரம் இந்தியாவில் உள்ள வேளான் பல்கலைக் கழகங்கள் , தொழில் நுட்ப பல்கலைக் கழகங்கள் உலகின் உயர்ந்த பல்கலைக் கழகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. எங்கள் நாட்டில் அதிலும் குறிப்பாக வடக்கே யாழ்ப்பாணம் ப்கலைக் கழகம் கிழக்கில் இரு பல்கலைக் கழகங்களும் உலக பல்கலைக் கழகங்களுடன் இணைய வேண்டும்.

ஏனெனில் இந்தியா போன்ற நாடுகளில் அவ்வாறு உலக பல்கலைக் கழகங்களுடன் இணைந்த பல்கலைக் கழகங்களில் கல்வி கற்று வெளியேறினால் உடனடியாக வேலை வாய்ப்பினை பெற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது. அதனால் எமது மாணவர்களும் கற்று வெளியேறும்போது அனைவரும் அவர்களிற்கு வேலை வாய்ப்பு வழங்க போட்டி போட்டு அழைப்பு விடுக்கும் நிலமையிலான கல்வி முறமை அமையவேண்டும். அதற்காக இந்தியாவின் மத்திய அரசும் தமிழ் நாட்டு அரசும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என்றார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com