சற்று முன்
Home / செய்திகள் / கலவரங்களைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது – மகிந்த குற்றச்சாட்டு

கலவரங்களைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது – மகிந்த குற்றச்சாட்டு

கலவரங்களைக் கட்டுப்படுத்தத் தவறியுள்ள நல்லாட்சி அரசாங்கம் மாறாக பொலிஸாரைக் குற்றஞ்சாட்டி வருவதாக சாடியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொலிஸாரின் மீது அபாண்டமாக பலி சுமத்துவத்தை, நல்லாட்சி அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

“நாட்டின் சில மாகாணங்களில் ஏற்பட்ட வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கு, பொலிஸார் தவறிவிட்டனர் என, நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சிலர் குற்றஞ்சாட்டியுள்ளனர். பொலிஸ் பிரிவானது, அரசாங்கத்தின் ஒரு பகுதியாக உள்ளது. எனவே, பொலிஸ் பிரிவின் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்குவது அபத்தாமனது என்றும் அவர் தெரிவித்தார்.

மீறிஹானவிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்த அவர், வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியாது போனமை. அரசாங்கத்தின் இயலாமையையே காட்டுகின்றது என்றும் தெரிவித்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com