சற்று முன்
Home / செய்திகள் / கச்சாயில் பட்டதாரி இளைஞன் சடலமாக மீட்பு – வேலையற்ற விரக்தியே காரணம் ?

கச்சாயில் பட்டதாரி இளைஞன் சடலமாக மீட்பு – வேலையற்ற விரக்தியே காரணம் ?

தென்மராட்சிப் பகுதியில் பட்டதாரி இளைஞன் ஒருவர் சமலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பட்டதாரியான அவர் வேலையற்ற விரக்தி நிலையிலேயே உயிரை மாய்த்துக்கொண்டதாககத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று (02) பகல் வேளையில் கொடிகாமம் கச்சாய் துறைமுகச் சாலையில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த கிருஸ்ணபிக்ளை சத்தியசீலன் வயது (29) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இழைஞனின் இறப்புத் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட கொடிகாமம் பொலிசார் நேற்று மாலை நீதிவானுக்கு அறிக்கையிட்டனர். நீதவான் குறித்த பிரதேசத்தின் திடீர் மரண விசாரணை அதிகாரி சீ.சீ.இழங்கீரன் மூலம் மரண விசாரணை நடாத்தி நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணித்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்த இளைஞன் கைப்பட எழுதியதாக தெரிவிக்கப்பட்ட கடிதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அதில் பல்கலைக்கழகப் படிப்பை முடித்தும் எனக்கு வேலை கிடைக்கவில்லை. எனது குடும்பத்திற்கு நான் எதுவும் செய்யவில்லை. படித்தும் வேலை கிடைக்கவில்லை என்று உள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இலங்கை அரசினால் தொடர்ச்சியாக பட்டதாரிகள் ஏமாற்றப்பட்டுவரும் நிலையில் அவர்கள் விரக்தி மனநிலையிலேயே உள்ளனர். 20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் என நேர்முகத் தேர்வு நடத்திய அரசாங்கம் 5 ஆயிரம் பேருக்கே நியமனம் என்றது. தற்போது புள்ளிகள் அடிப்படையிலோ அன்றில் பட்டச்சான்றிதழ் ஆண்டு அடிப்படையிலோ நியமனம் வழங்காமல் அரசியல் நியமனங்களை வழங்க முனைவதாக பட்டதாரிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளதோடு அவர்கள் ரணில்-மைத்திரி அரசின் தான்தோன்றித்தன செயற்பாடுகளினால் விரக்தியடைந்துள்ளனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com