சற்று முன்
Home / செய்திகள் / ஒரு மாதத்துள் நியமனம் இன்றேல் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் – ஒருங்கிணைந்த பட்டதாரிகள் சங்கம்

ஒரு மாதத்துள் நியமனம் இன்றேல் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் – ஒருங்கிணைந்த பட்டதாரிகள் சங்கம்

வேலையற்றப் பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை விரைவில் வழங்காவிட்டால், மீண்டும் ஆர்ப்பாட்டப் பேரணிகளை முன்னெடுப்பதாக, ஒருங்கிணைந்த தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி அவர்கள் நேற்று முன்தினம் (14) தேசிய கொள்ளை மற்றும் பொருளாதார விவகார அமைச்சுக்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, எதிர்வரும் 30 தினங்களுக்குள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத் தெர்வு இடம்பெறவுள்ளதாக, அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இவ்வாறு வழங்கப்பட்ட உறுதிமொழியை அதிகாரிகள் நிறைவேற்ற தவறும் பட்சத்தில், மீண்டும் ஆர்ப்பாட்டப் பேரணிகளை முன்னெடுக்கவுள்ளதாக, ஒருங்கிணைந்த தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர், தென்னே ஞானானந்த தேதர் குறிப்பிட்டுள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com