சற்று முன்
Home / செய்திகள் / ஒப்பிரேசன் முள்ளிவாய்க்கால் – தமிழ் ஈழம் சைபர் படையே தாக்குதல் நடத்தியதாம்

ஒப்பிரேசன் முள்ளிவாய்க்கால் – தமிழ் ஈழம் சைபர் படையே தாக்குதல் நடத்தியதாம்

இலங்கைக்கான குவைட் தூதரகம் உள்ளிட்ட டொட் எல்.கே மற்றும் டொட். கொம் ஆகிய முகவரிகளைக் கொண்ட 11 இணையத்தளங்கள் மீது நேற்று முன்தினம் சனிக்கிழமை இணையவழித் தாக்குதல் நடத்தப்பட்டிருந்த நிலையில் அவை சீர்செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்க தகவல்கள் தெரிவித்துள்ளன.

குறித்த இணையத்தளங்களுக்குள் புகுந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பான தகவல்களையும் விடுதலைப் புலிகளின் கொடி, பாடல் உள்ளிட்டவற்றையும் பதிவேற்றி இணையவழி தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இவ்வாறு அனுமதியின்றி பிரவேசித்து தாக்குதலுக்கு உள்ளான இணைத்தளங்களுள், இலங்கைக்கான தூதரகங்கள், உள்ளூராட்சி அமைப்புக்கள், தனியார் நிறுவனங்கள், ரஜரட்ட பல்கலைக்கழக இணையத்தளம் மற்றும் தேயிலை ஆராச்சி நிலையத்தின் இணையத்தளம் என்பனவும் உள்ளடங்குகின்றன.

எனினும் இந்த தாக்குதலை நடத்தியவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என குறிப்பிட்டுள்ள இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு இவ்வாறான தாக்குதல் கடந்த வருடம் மே மாதம் 18ம் திகதியும் நடத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை தமிழ் ஈழம் சைபர் படை என்ற குழுவே, சிறிலங்காவில் இணையத்தளங்களின் மீது சைபர் தாக்குதலில், ஈடுபட்டது, என்று கண்டறியப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இச் சைபர் தாக்குதலாலனது தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமான மே 18 அன்று நடத்தப்பட்டுவருகின்றதோ, குறித்த தாக்குதலானது ஒப்பிரேசன் முள்ளிவாய்க்கால் எனப் பெயரிடப்பட்டே மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com