சற்று முன்
Home / செய்திகள் / “ஒட்டுக்குழுக்கள்“ “இனப்படுகொலையாளிகள்“ என தாமே குற்றஞ்சாட்டியவர்களுடன் இணைந்து சகல சபைகளிலும் ஆட்சியமைக்கிறது தமிழரசு

“ஒட்டுக்குழுக்கள்“ “இனப்படுகொலையாளிகள்“ என தாமே குற்றஞ்சாட்டியவர்களுடன் இணைந்து சகல சபைகளிலும் ஆட்சியமைக்கிறது தமிழரசு

வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களைக் கொன்று குவித்தும் காட்டிக்க கொடுத்தும்வந்த இனப்படுகொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட தென்னிலங்கை பேரினவாதக் கட்சிகளுடனும் யுத்தகாலத்தில் பேரினவாதிகளின் ஒட்டுக் குழுக்களாகச் செயற்பட்டு தமிழர் தேசத்தை காட்டிக்கொடுத்தவர்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலேயே கடுமையாக விமர்சிக்கப்பட்டுவந்த கட்சிகளுடனும் இணைந்து உள்ளூராட்சி சபைகளில் தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்துவருகின்றது.

கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சிசபைத் தேர்தலில் வடக்கு கிழக்கில் எந்த சபையினையும் எக்கட்சியும் ஆட்சியமைக்க முடியா தொங்கு நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஒவ்வொரு சபைக்கும் தவிசாளர்களைத் தேர்ந்தெடுக்கின்ற நடவடிக்கை ஆரம்பமாகியிருந்தது.
ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக மற்றும் ஈபிடிபியுடன் தரழரசுக் கட்சியின் பேச்சாளராக இருக்கின்ற சுமந்திரன் தமக்கு ஆதரவு வழங்குமாறு நேரடியாகவும் தனது பிரதிநிதிகள் ஊடகவும் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

சுமந்திரனின் எஜனமான ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கியதேசியக் கட்சி உடனடியாகவே தமிழரசுக் கட்சிக்கு சகல சபைகளிலும் தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தது. இந்நிலையில் நழுவல் போக்கினைக் கடைப்பிடித்துவந்த ஈபிடிபியுடன் தொடர்ச்சியாக தமிழரசுக் கட்சிய பேச்சுக்களை மேற்கொண்டுவந்தது. யாழ்.மாநகரைத்தவிர ஏனைய இடங்களில் பூரண ஆதாரவு தரப்படும் என ஈபிடிபியினால் உத்தரவாதம் அளிக்கப்பட்டதாககக் கூறப்படுகின்றது.

எனினும் யாழ் மாநகருக்கும் ஆதரவு தரவேண்டும் எனக் கோரி தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜாவே நேரடியாக களத்தில் இறங்கி டக்ளஸ் தேவானந்தாவுடன் பேச்சு நடத்தியு்ளளார். இதனைடுத்து சில நிபந்தனைகளுடன் ஈபிடிபி தரப்பு இணக்கப்பாட்டுக்கு வந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ் மாநகர சபையில்..

? TNA ஆனோல்ட்டிற்கு ஆதரவளித்தவர்கள் மொத்தம் 18

1) தமிழரசுக்கட்சி – 16
2) சிறீலங்கா சுதந்திரக் கட்சி – 02

? EPDP றெமிடியஸுக்கு ஆதரவளித்தவர்கள் மொத்தம் 13

1) EPDP -10
2) ஐக்கிய தேசிய கட்சி – 03

? TNPF மணிவண்ணனுக்கு ஆதரவளித்தவர்கள் மொத்தம் 13

1) 13 பேரும் முன்னணி உறுப்பினர்கள்.

இறுதியில் ஈபிடிபியில் போட்டியிட்ட றெமீடியஸ் தான் போட்டியிலிருந்து விலகுவதாக தமிழரசுக் கட்சிக்கு விட்டுக்கொடுக்க தமிழரசுக்கட்சி , சிறீலங்கா சுதந்திரக் கட்சி , EPDP ஐக்கிய தேசிய கட்சி ஆகியன இணைந்து யாழ்ப்பாணம் மாநகர சபையில் ஆட்சியமைத்துள்ளன.

அதன் தொடர்ச்சியாக சாவகச்சேரி நகரசபையிலும் தாமே ஒட்டுக்குழுக்கள் எனவும்இனப்படுகொலையாளிகள் எனவுவும் தேர்தல் மேடைகளில் விமர்சிக்கப்பட்ட கட்சிகளுடன் இணைந்து தமிழரசுக் கட்சி ஆட்சியமைத்துள்ளது.
அவ்வகையில் 12 பேர் தமிழரசுக்கட்சிக்கு ஆதரவளித்துள்ளனர். அவர்களில்
1. இலங்கை தமிழ் அரசு கட்சி – 05
2. ஈழ மக்கள் சனநாயக கட்சி – 03
3. சிறீலங்கா சுதந்திரக் கட்சி – 02
4. தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி – 01
5. ஐக்கிய தேசிய கட்சி – 01

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 06 பேரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் பிரேரிக்கப்பட்ட தவிசாளர் வேட்பாளருக்கு வாக்களித்துள்ளனர்.

இறுதியில் தமிழரசுக்கட்சி , சிறீலங்கா சுதந்திரக் கட்சி, ஈழ மக்கள் சனநாயக கட்சி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி (ஈபிஆர் எல் எப் வரதர் அணி) ஆகியன இணைந்து சாவகச்சேரி நகரசபையில் புதிய அரசை நிறுவியுள்ளன.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com