சற்று முன்
Home / செய்திகள் / ஐரோப்பிய யூனியனின் கேள்விகளுக்கு பதிலளிப்பது எப்படி ? – யாழில் அமைச்சர்கள் ஆராய்வு !

ஐரோப்பிய யூனியனின் கேள்விகளுக்கு பதிலளிப்பது எப்படி ? – யாழில் அமைச்சர்கள் ஆராய்வு !

ஐரோப்பிய யூனியனின் தொடர் கேள்விகளிற்குப் பதிலளிக்கும் வகையிலும் நில விடுவிப்புத் தொடர்பாக ஆராயும் நோக்கிலும் அமைச்சர்களான திலக் மாறப்பன மற்றும் வஜிர அபேவர்த்தன ஆகியோர் யாழ்ப்பாணம் , கிளிநொச்சி மாவட்டங்களில் தனித் தனியான கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற நடமாடும் சேவையில் பங்குகொண்ட குறித்த அமைச்சர்கள் மாவட்ட அரச அதிபர்களை சந்தித்து மாவட்டத்தில் தற்போதும் படைநினர் வசமுள்ள நிலங்களின் விபரங்களை கேட்டறிந்துகொண்டனர். யாழில் இடம்பெற்ற கலந்துரையாடலினையடுத்து கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்புபடைகளில் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் தொடர்பாக கலந்துரையாடல் மேற்கொள்வததற்காக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேயவர்த்தன மற்றம் வெளிநாட்டு அமைச்சர் திலக்மாரப்பன ஆகியோரிடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் , சி.சிறிதரன் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

குறித்த குழுவினர் கிளிநொச்சியில் 20 நிமிடங்களில் கூட்டத்தை நிறைவு செய்து சென்றிருந்தனர் அங்கு தற்போது பாதுகாப்பு படைகளிடம் எவ்வளவு காணிகள் காணப்படுகின்றன இராணுவத்தால் விடுவிக்கப்பட்டு இதுவரை மக்களிடம் கையளிக்கப்படாத காணிகள் எவ்வளவு இருகின்ற போன்ற தகவல்களை பெற்றுக்கொண்ட அமைச்சர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமச்சின் செயலாளர்களுடன் அவசரமாக விடப்படவேண்டிய காணிகள் தொடர்பாக கலந்துரையாடல் ன்றினை நடாத்துவதற்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்

இதேநேரம் யாழில் இடம்பெற்ற கலந்துரையாடலில் வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கு கொண்டிருந்தனர். குறித்த சந்திப்பில் பங்கு கொண்ட வெளிவிவகார அமைச்சர் குறித்த விடயம் தொடர்பாக உலக நாடுகள் கேட்கும் கேள்விகளில் நில விடுவிப்பும் முக்கிய இடத்தில் உள்ளதனால் அதுதொடர்பிலும் கவனம் செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்புக்களில் படையினர் விடுவித்தும் மக்களிடம் கையளிக்காத நிலம் என எவையும் இல்லை எனவும். ஏனைய இடங்களையே மக்கள் எதிர்.பார்பபதாகவும் சுட்டிக்காட்டியதோடு கிளிநொச்சியில் நில விடுவிப்பில் முக்கியமாக வாழ்வாதார நிலங்களும் திணைக்கள பண்ணைகளை முக்கியமாக அடுத்த கட்டமாக விடுவிக்க வேண்டும் எனவும் கிளிநொச்சியில் மட்டும் படையினர் வசம் 6 பண்ணைகள் உள்ளன எனச் சுட்டிக்காட்டப்பட்டது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com