சற்று முன்
Home / Uncategorized / ஐஎஸ் பிடியில் இருந்த ரமாடி நகரை ஈராக் ராணுவத்தினர் மீட்டது எப்படி? (அதிர வைக்கும் வீடியோ)

ஐஎஸ் பிடியில் இருந்த ரமாடி நகரை ஈராக் ராணுவத்தினர் மீட்டது எப்படி? (அதிர வைக்கும் வீடியோ)

ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த முக்கிய நகரமான ரமாடி நகரை கடும் சண்டைக்கு பின்னர் ஈராக் ராணுவத்தினர் மீட்டுள்ளனர். இதனிடையே, 2016-ம் ஆண்டில் ஈராக்கிலிருந்து முற்றிலுமாக ஐஎஸ் தீவிரவாதிகள் ஒழிக்கப்படுவார்கள் என அந்நாட்டின் பிரதமர் ஹைதர் அல் அபாடி சபதம் எடுத்துள்ளார்.

ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐஎஸ் தீவிரவாதிகள் தற்போது தோல்வியை சந்தித்து வருகின்றனர். ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியிலிருந்த முக்கிய நகரமான ரமாடியை ஈராக் ராணுவத்தினர் கைப்பற்றினர்.

பாக்தாத் மேற்கு பகுதியில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில்தான் ரமாடி நகர் இருக்கிறது. இதற்கிடையே ரமாடியை கைப்பற்றியுள்ளது ஈராக் ராணுவத்தினருக்கு புது உத்வேகத்தை அளித்துள்ளது.

இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ஹைதர் அல் அபாடி, “வரும் 2016–ல் ஐ.எஸ் தீவிரவாதிகள் ஈராக்கில் இருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படுவார்கள். அதுவே அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றியாக அமையும். தற்போது ரமாடியை நமது ராணுவம் கைப்பற்றி உள்ளது. நமது அடுத்த இலக்கு மிகப்பெரிய நகரமான மொசூலை மீட்பதுதான்” என்று தெரிவித்துள்ளார்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆயுதம் மேல் நம்பிக்கையுள்ளோர் வாக்களிக்காதீர்கள்!

நான் உங்களுக்கு தரும் வாக்குறுதி ஆயுதம் இல்லாமல் வன்முறை இல்லாமல் அஹிம்சை மூலம் ராஜதந்திர நகர்வுகள் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com