சற்று முன்
Home / செய்திகள் / ஏனைய சபைகளுக்கும் வேட்புமனு கோரப்பட்டது – பெப்ரவரி நடுப்பகுதியில் தேர்தல்

ஏனைய சபைகளுக்கும் வேட்புமனு கோரப்பட்டது – பெப்ரவரி நடுப்பகுதியில் தேர்தல்

உள்ளூராட்சித் தேர்தல்கள் வரும் பெப்ரவரி 17ஆம் நாள் அல்லது அதற்கு முன்னதாக நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

இந்நிலையில் ஏனைய உள்ளூராட்சி சபைகளுக்கும் வேட்புமனு கோரப்பட்டுள்ளது. அதன்பிரகாரம் எதிர்வரும் 20 ஆம் திகதி நண்பகலை 12 மணிவரை கட்டுப்பணம் செலுத்த முடியும் எனவும் வேட்புமனுக்கள் எதிர்வரும் 18.12.2017 முதல் 21.12.2017 நண்பகல் 12 மணிவரை ஏற்றுக்கொள்ளப்படும்.

“உள்ளூராட்சித் தேர்தலை சனிக்கிழமை ஒன்றில் நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படவுள்ளது.

தேர்தல்கள் வரும் பெப்ரவரி 17ஆம் நாள் அல்லது அதற்கு முன்னர் நடைபெறும்.

ஞாயிற்றுக்கிழமையிலோ, விடுமுறை நாளிலோ தேர்தல் நடத்தப்படாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி 10ஆம் நாள் தேர்தல்கள் நடைபெறும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது,

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com