சற்று முன்
Home / செய்திகள் / எழுச்சிகொண்டது தமிழர் தாயகம் தடைகளை மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி

எழுச்சிகொண்டது தமிழர் தாயகம் தடைகளை மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி

தடைகள் , அச்சுறுத்தல்கள் , கண்காணிப்புகள் கெடுபிடிகள் என்பவற்றை தாண்டி வடக்கு கிழக்கு எங்கும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
குறிப்பாக வடக்கில் யாழ்ப்பாணத்தில் சாட்டி , யாழ்.பல்கலைக்கழகம் , வல்வெட்டித்துறை உள்ளிட்ட இடங்களில் தடைகளை தாண்டி நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இன்று மாலை 6.05 மணியளவில் ஆலயங்களெங்கும் நினைவு ஒலி எழுப்பட்டதையடுத்து 6.06 மணிக்கு ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது. 6.07 மணிக்கு விசேடமாக அமைக்கப்பட்ட இடங்களிலும் வீடுகளிலும் மக்கள் சுடரேற்றி மாவீரச் செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே மெய்நிகர் ஊடக மாவீரர் பாடல்கள் தமிழீழ தேசியத் தலைவரது உரை என்பன ஒளிபரப்பட்டுக்கொண்டிருந்ததோடு தமிழ் இளையோர் ஆர்வத்துடன் அவற்றில் பங்கேற்றதோடு தமது வீடுகளிலும் மாவீரர் பாடல்களையும் மாவீரர் கல்லறை உறுதியுரைப் பாடலையும் ஒலிக்கவிட்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

இதேவேளை வடக்கு கிழக்கு தமிழர் தாயகமெங்கும் மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடுக்கும் வகையில் துயிலுமில்லங்கள் பொது இடங்கள், வீதிகள் ஆலயங்கள் உள்ளிட்ட இடங்களில் இராணுவத்தினர் குவிகப்பட்டதோடு இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com