சற்று முன்
Home / செய்திகள் / “எனது மரணத்திற்கு வைத்தியரே காரணம்” – உயிரை மாய்த்த தாதியின் குரல் பதிவு வாக்குமூலம்

“எனது மரணத்திற்கு வைத்தியரே காரணம்” – உயிரை மாய்த்த தாதியின் குரல் பதிவு வாக்குமூலம்

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் டன்பார் வீதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் சில வருட காலம் தாதியாக தொழில் செய்து வந்த 22 வயதுடைய யுவதி ஒருவர் அதிகளவிலான மாத்திரைகள் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று கடந்த 27.01.2019 அன்று இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த யுவதியான முருகையா சாந்தினி 22 வயதுடைய தலவாக்கலை வட்டகொடை யொக்ஸ்போர்ட் தோட்டத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

குறித்த யுவதி 27.01.2019 அன்று இரவு வேளையில் குறித்த மருத்துவமனையிலேயே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக உறவினர்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதுடன், பொலிஸார் சம்மந்தபட்ட வைத்தியசாலையின் வைத்தியரை விசாரணைக்குட்படுத்திய போதிலும், முறையான விசாரணைகள் மற்றும் கைது நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என உறவினர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வைத்திய அதிகாரி தவறான முறையில் நடந்த கொள்ள முயற்சித்ததாகவும், வைத்திய அதிகாரியின் மனைவியும் கொடுமைப்படுத்தியதாகவும், இதனாலையே தான் அதிகளவிலான மாத்திரைகளை உட்கொண்டு இறக்க போவதாகவும் என்னை யாராலும் காப்பாற்ற முடியாது எனவும் எனது இறப்புக்கு வேறு யாரும் காரணம் அல்ல. வைத்தியரும் அவரது மனைவியும் தான் என்று குரல் பதிவு செய்த ஒலி கோவை ஒன்று உறவினர்களிடம் உள்ளது.

அந்த குரல் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

உயிரிழந்த யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டு, இன்று 29.01.2019 அவரின் இறுதி கிரியைகள் மேற்படி தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

அத்தோடு, உயிரிழந்த யுவதியின் பெற்றோர்கள் சம்மந்தப்பட்ட வைத்திய அதிகாரி கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் முன்வைத்துள்ளனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com