சற்று முன்
Home / செய்திகள் / உரிய நேரத்தில் நேரத்தில் யார் அமைச்சர் என நான் முடிவெடுப்பேன் – முதலமைச்சர்

உரிய நேரத்தில் நேரத்தில் யார் அமைச்சர் என நான் முடிவெடுப்பேன் – முதலமைச்சர்

கல்வி அமைச்சராக ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது இது உண்மையா என பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதில் எந்தவித உண்மையும் இல்லை. யார் யாரை நியமிப்பது என்பது சம்பந்தமாக தன்னால் முடிவெடுக்கப்படவில்லை எனவும் நியமனங்களைச் செய்ய வேண்டியவர் முதலமைச்சரே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

போரின் பின்னரான காலகட்டத்தின் தேவைகளுக்கும் முன்னுரிமைகளுக்கும் அமைவாக (Needs and Priorities) உரிய செயல்முறைகளுக்கும் , செயல் நடவடிக்கைகளுக்கும் அமைவாக (due Processes and Procedures) உரிய நேரத்தில் குறிப்பிட்ட நியமனங்கள் தன்னால் செய்யப்படும். தற்பொழுது பதவி விலகிய அமைச்சர்களின் அமைச்சுக்களை தானே மேற்பார்வை செய்து வருகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com