சற்று முன்
Home / செய்திகள் / “உயிர்கொல்லும் விஷச் சாராம்” – 372 பரல்கள் யாழில் பிடிபட்டது !!

“உயிர்கொல்லும் விஷச் சாராம்” – 372 பரல்கள் யாழில் பிடிபட்டது !!

மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கதக்கதான எதனோல் போதை அமிலம் 372 எண்ணை பரல்களுக்குள் யாழ்ப்பாணத்திற்கு கடத்திவரப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

ஒவ்வொன்றும் 21 லீட்டர் கொள்ளளவுடைய எண்ணெய் தாங்கிகளில் அது மரக்கறி எண்ணெய் போன்று கடத்தப்பட்டுள்ளது. அதன் மொத்த அளவு 7812 லீட்டர் என கண்டறியப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை விசேட அதிரடி படையினர் சுன்னாகம் பகுதியில் பாரவூர்தி ஒன்றினை மறித்து சோதனையிட்ட போது அதனை மீட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பனம் சாராய முகவர் ஒருவரே அதனை இறக்குமதி செய்ததாக சொல்லப்படுகின்றது.

சாராயத்துடன் கலந்து அதனை விற்பனை செய்யவே கடத்தி வந்ததாக தெரியவருகின்றது.

இதனிடையே எத்தனோல் என்பது பாரிசவாதம் போன்றவற்றை உடனடியாக தேடி வரவழைக்ககூடியது .நகரப்புறங்களில் எத்தனோல் தொடர்பான விழிப்புணர்வு காணப்பட்டாலும் கிராமப்புறங்களில் அது தொடர்பான விழிப்புணர்வு மிகக்குறைவென மதுவரி திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பொதுவாக மதுபானங்களுக்கு அல்ககோல் மாத்திரமே பயன்படுத்தவேண்டுமென்பதே உலக நியதி . இலங்கையில் முன்பு தாராளமயமாக எத்தனோல் பயன்படுத்தபட்டது . இலங்கையில் காணப்படுகின்ற உள்ளூர் உற்பத்தி வெள்ளை நிற சாராயப்போத்தல்களில் எத்தனோலே கூடிய பங்கு காணப்பட்டது .

2003 களில் ரணில் ஆட்சியின்போது எத்தனோல் தடைசெய்யப்பட்டது . மீண்டும் மகிந்த காலத்தில் எத்தனோல் தாராளமயமாக்கப்பட்டது . வெள்ளைநிற சாராயத்தில் மட்டுமல்லாது அனைத்துவகை உள்ளூர் உற்பத்தி சாராயங்களிலும் எத்தனோல் கலப்பு காணப்பட்டது . தற்போது எத்தனோல் தடைசெய்யப்பட்டுள்ளபோதும் இன்னமும் சந்தையில் புழக்கத்திலேதான் உள்ளதாகவும் அத்தரப்பு மேலும் தெரிவிக்கின்றது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை !

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க அனுமதிக்க முடியாது ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com