சற்று முன்
Home / செய்திகள் / உதய சூரியனில் போட்டி இல்லை – பேரவையின் கொள்கைகளே எனது கொள்கைகளை ஒத்தது – முதல்வர் மீண்டும் அறிக்கை

உதய சூரியனில் போட்டி இல்லை – பேரவையின் கொள்கைகளே எனது கொள்கைகளை ஒத்தது – முதல்வர் மீண்டும் அறிக்கை

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் உதயசூரியன் போட்டியிடப் போவதாக தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நேற்று (27) குறிப்பிட்டிருந்ததை மறுத்துள்ள முதலமைச்சர் தமிழ் மக்கள் பேரவையின் கொள்ககளை தனது கொள்கைகளை ஒத்த கொள்கையாக இருப்பதாகவும் அக் கொள்கைகளை உடையவர்களை தான் மதிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சரின் இந்த அறிக்கையினால் திம்புக் கோட்பாடுகளை அடிப்படையாக வைத்து உள்ளூராட்சித் தேர்தலில் களமிறங்கியுள்ள கூரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் ஆனந்தசங்கரியின் கூட்டமைப்பான தமிழர் விடுதலைக் கூட்டணி நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் முதலமைச்சர் வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கையில் தமிழரசுக் கட்சியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அவர்கள் கொள்கை நழுவிச் செயற்படுவதாக கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் முதலமைச்சர் தமக்கே ஆதரவு என நேற்று திடீனெ தமிழர் விடுதலைக் கூட்டணியின் பங்காளிகட்சியான ஈபிஆர்எல்எவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உரையாற்றியிருந்தார்.

இதனையடுத்து இன்று சிவசக்தி ஆனந்தனின் உரையினை மறுத்துள்ள முதலமைச்சர் தமிழ் மக்கள் பேரவையின் கொள்ககளை தனது கொள்கைகளை ஒத்த கொள்கையாக இருப்பதாகவும் அக் கொள்கைகளை உடையவர்களை தான் மதிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலமையிலான ஈபிஆர்எல்எவ் கட்சியினர் தமிழ்மக்கள் பேரவையின் அரசியல் வரைபையும் அதன் கொள்கைகளையும் ஏற்றுச் செயற்பட்டிருந்தபோதிலும் அவர்கள் ஆனந்தசங்கரியுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில் திம்புக் கோட்பாடே தமது கோட்பாடு என அறிவித்திருந்தனர்.

முதலமைச்சர் நேரிடையாக எந்த அணியினரை ஆதரிப்பதாக வெளிப்படுத்தியிராதபோதிலும் முதல் அறிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் இன்று வெளியிட்ட இரண்டாவது அறிக்கையில் தமிழர் விடுதலைக் கூட்டணியினையும் விமர்சித்துள்ளதோடு பேரவையின் கொள்கைப்படி நிற்பவர்களை மதிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது பேரவையின் கொள்கைகளையே தாங்கள் முன்னெடுத்துச் செல்லப்போவதாக அறிவித்து செயற்பட்டுவரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலமையிலான தமிழ்த் தேசியப் பேரவையினருக்கே வலுச்சேர்க்கும் என அரசியல் நோக்கர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

முதலமைச்சரின் அறிக்கை வருமாறு,

வடக்கு கிழக்கில் இத்தேர்தல் காலத்தில் என் பெயரை இழுத்து கட்சிகளின் சார்பிலும் தனிப்பட்ட வேட்பாளர்கள் சார்பிலும் நன்மைகளைப் பெற பலர் எத்தனிக்கின்றார்கள் என்று தெரியவருகின்றது. எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தல் பற்றி நான் எந்தவித முடிவும் எடுக்காமலேயே என்னுடைய சின்னம் பற்றி எல்லாம் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.

நான் ஏற்கனவே எனது கருத்துக்களை வெளியிட்டு விட்டேன். ஊழலற்ற, நேர்மையான, தகைமையுடைய,தமது மக்களை நேசிக்கும் வேட்பாளர்களுக்கு உங்கள் வாக்குகளை அளியுங்கள் என்று கோரியுள்ளேன். உள்ளூராட்சியில் கட்சிகள் புகுந்ததால் இதுகாறும் எமது உள்ளூராட்சி மன்றங்கள் பலவிதமான சிக்கல்களை எதிர் நோக்கி வந்துள்ளன. இதே போன்றுதான் முன்னர் அரசியல்வாதிகளும் அரசியலும் புகுந்து எமது கூட்டுறவு சங்கங்களை சின்னாபின்னமாக்கி வைத்தன.

நான் இதுவரையில் எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தல் பற்றியோ கட்சி சின்னம் பற்றியோ இப்போது சிந்திக்கவில்லை. எனது அரசியல் கொள்கைகள் கிட்டத்தட்ட தமிழ் மக்கள் பேரவையின் கொள்கைகளை ஒத்தது என்று ஏற்கனவே கூறியுள்ளேன். அத்துடன் அக்கொள்கையானது 2013ம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் ஒத்தது என்றும் கூறியுள்ளேன். தமிழ் மக்கள் பேரவையின் கருத்துக்களுடன் ஒத்த கருத்துடையவர்களை நான் மதிக்கின்றேன்.
நன்றி

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com