சற்று முன்
Home / செய்திகள் / உணவகங்களை நாடுவோருக்கான முக்கிய அறிவித்தல்

உணவகங்களை நாடுவோருக்கான முக்கிய அறிவித்தல்

மே-11ம் திகதி தொடக்கம் நாட்டில் இயல்பு வாழ்க்கை திரும்பவுள்ள நிலையில், கொ ரோனா அபாயத்திலிருந்து பாதுகாப்பாக இருப்பது தொடர்பாக குறிப்பாக உணவகங்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள்,

மற்றும் பொதுமக்கள் நடந்து கொள்ளவேண்டிய முறைகள் தொடர்பாக வடமாகாண சுகாதார அமைச்சு மக்களுக்கான அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கின்றது. அவையாவன,

அன்பார்ந்த பொதுமக்களே!

தற்போது மிகவும் ஆபத்தான கோரோனா தொற்று நோய் பரவி வருவதனால் உணவகங்களில் உணவு உண்ணும் போது பின்வரும் நடைமுறைகளை அவதானமாகக் கடைப்பிடியுங்கள்.

  1. இயலுமானவரை உணவினை வாங்கிச் சென்று உண்ணுங்கள்.
  2. உணவகத்தின் உள்ளே இருவருக்கு இடையில் ஆகக் குறைந்தது 3 அடி இடைவெளி இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  3. உணவு கையாளும் நிலையத்தில் கடமையாற்றுபவர்கள் முகக் கவசம் அணிந்திருப்பதையும்சுத்தமாக இருப்பதையும் உறுதிப்படுத்துங்கள்.
  4. உணவு கையாளும் நிறுவனத்தில் கடமையாற்றும் வேலையாள்கள், 2 மணித்தியாலத்திற்கு ஒருமுறை ஓடும் நீரில் சவர்க்காரமிட்டு சரியான முறையில் 20 செக்கன்களாவது கைகளைகழுவுவது உறுதி செய்யப்படவேண்டும். உள் நுழையுமிடத்தில் வாடிக்கையாளர்கள் கைகளைகழுவுவதற்கான வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
  5. சிறிதளவேனும் காய்ச்சல், இருமல், தொண்டை நோ போன்ற கோரோனா தொற்றின்குணங்குறிகளுடைய வேலையாள்கள் எவரும் உணவு கையாளும் நிறுவனத்தினுள்ளோவளவினுள்ளோ கடமையில் ஈடுபடலாகாது.
  6. பொதுமக்கள் உணவங்கள் தொடர்பான முறைப்பாடுகளைத் தங்களது பகுதிப் பொதுச் சுகாதாரபரிசோதகருக்கு மேற்கொள்ள முடியும்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com