சற்று முன்
Home / இந்தியா / உங்களை ஜெயிக்க வைத்துவிட்டோம் – வலிமை பட அப்டேற் எங்கே – வானதியை வறுத்தெடுக்கும் தல ரசிகர்கள்

உங்களை ஜெயிக்க வைத்துவிட்டோம் – வலிமை பட அப்டேற் எங்கே – வானதியை வறுத்தெடுக்கும் தல ரசிகர்கள்

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து கடந்த மே 2-ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை முடிவடைந்தது. தமிழகத்தில் திமுக கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.கோவை தெற்கு தொகுதியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் அவரை எதிர்த்து பிஜேபி வேட்பாளரான வானதி சீனிவாசன் அவர்களும் போட்டியிட்டனர். இதை போட்டியில் உலக நாயகனை சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார் வானதி ஸ்ரீனிவாசன்.

இவர் வேட்புமனு தாக்கல் செய்து பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்த போது அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் கேட்டனர். ‌‌ நான் சட்டமன்ற தேர்தலில் ஜெயித்தால் உங்களுக்கு வலிமை அப்டேட் கிடைக்கும் என தெரிவித்து ட்வீட் செய்தார். இந்த ட்வீட்டை தற்போது அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து உங்களை நாங்க ஜெயிக்க வைத்து விட்டோம். இப்போ சொன்னபடி வலிமை அப்டேட்டை கொடுங்க என அடம் பிடித்து வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

அஜித் ரசிகர்களுக்கு வானதி சீனிவாசன் என்ன பதிலை கொடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com