சற்று முன்
Home / செய்திகள் / ஈ.பி.டி.பியிலிருந்து வெளியேறியவர்கள் ஒன்றிணைந்து புதிய அரசியல் கட்சியாக பதிவுசெய்ய நடவடிக்கை

ஈ.பி.டி.பியிலிருந்து வெளியேறியவர்கள் ஒன்றிணைந்து புதிய அரசியல் கட்சியாக பதிவுசெய்ய நடவடிக்கை

ஈ.பி.டி.பி அமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைந்து ஓர் புதிய அரசியல் கட்சி ஒன்றினை உருவாக்குவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளரின் உதவியை நாடியுள்ளனர்.

ஈ.பி.டி.பி கட்சியில் இருந்து கடந்த காலங்களில் வெளியேறிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் மற்றும் தற்போதைய வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரான சி.தவராசா உள்ளிட்ட சிலர் ஒன்றிணைந்து ஓர் புதிய அரசியல் கட்சியை உருவாக்கி அதனை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஒன்றாகப் பதிவு செய்யும் நோக்கில் நேற்று முன்தினம் தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளரை நாடியுள்ளனர்.

இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் கொழும்பு தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகம் சென்று பதிவிற்கான விதிமுறைகள் அதற்கான ஆவணங்கள் , சட்ட ஒழுங்குகள் தொடர்பில் பிலஸ்தாபித்துள்ளார். இவ்வாறு புதிதாக பதிவு செய்யப்படவுள்ள அரசியல் கட்சியில் சி.தவராசாவும் அங்கம் வகிப்பது உறுதியாகின்றது.

இதேநேரம் சந்திரகுமார் கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு கணிசமான வாக்கினையும் 19 உறுப்பினர்களையும் பெற்றுள்ளதோடு வடக்கு மாகாண எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசாவும் தனது கட்சியுடன் அதிருப்தி கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com